
நாதஸ்வர மேதை சு. பால முருகனுக்கு “இசைஞானகேசரி” விருதை சந்நிதியான் ஆச்சிரமம் வழங்கி கௌரவித்துள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற வைகாசி பெருவிழாவிலேயே இவ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்று அங்கிருந்து சந்நிதியான் ஆச்சிரமம் வரை மங்கல வாத்தியம் முழங்க பாலமுருகன் அழைத்து வரப்பட்டு அங்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் வாழ்த்துரையை கலாபூசணம் சிவஞானராஜா உட்பட பலரும் நிகழ்தியத்துடன் பாலமுருகனுக்கு பலரும் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.