கிளிநொச்சிஇ ஜூலை. 14 கிளிநொச்சியில் அமைந்துள்ள அகில இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் கலைக்கோயில் வளாகத்தில், திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கம்பவாதிரி இ.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் நாட்டின் வி.ஜி.பி.குழுமத்தைச் சேர்ந்தவரும் திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக வழங்கியவருமான கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோசம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், தமிழ்நாடு கோவிலூர் வேதாந்த மடத்தின் குரு முதல்வர் சீர்வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், பம்பாய் திருக்குறள் தேனீ வி.மகாலிங்கம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் ஓய்வுநிலைப் பேராசிரியர்கள், அகில இலங்கை கம்பன் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, திருவள்ளுவரின் அறநெறிகளையும் தமிழ் பண்பாட்டு மரபையும் போற்றும் வகையில் இடம் பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.