அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் – 3
- சின்ன வெங்காயம் – 5
பயன்படுத்தும் முறை :
- முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து இவற்றை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
- இதையடுத்து இதனை தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- இறுதியாக தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
- இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.