கண்ணீர் அஞ்சலி – வயித்திலிங்கம் தங்கவேல்

இவர் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.

  • கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்றவர்களான வயித்திலிங்கம் தங்கம்மாவின் புதல்வரும்
  • கொம்மந்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ் சென்றவர்களான தம்பு தங்கம்மாவின் மருமகனும்
  • அகுந்தவமலரின் அன்புக் கணவரும்
  • சிவமலர் (கனடா) சிவசுதன் (கல்வி வலயம் பருத்தித்துறை) சிவசோபனா (ஆசிரியர், இமையாணன் அ.த.க. பாடசாலை) சிவகோபி (கனடா) ஆகியோரின் தந்தையும்
  • குமுதானந்தன் (கனடா) மீரா (ஆசிரியர், வல்வை சிவகுரு வித்தியாலயம்) ஜெயக்குமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர், நெடுந்தீவு) பிரசாந்தி (கனடா) ஆகியோரின் மாமனாரும்
  • சுஜந்தன், சிந்துஜன், நீரஜன், சாதனா, மகிஜா, மாதிரஜன், அகானா, அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும்
  • காலம் சென்ற தியாகராசா, துரைராசா, மனோன்மணி, மோகன சுந்தரம் மற்றும் நடராசா, துரையப்பா, ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 2026.10.15 வியாழக்கிழமை 10.00 மணிக்கு இடம் பெற்று ஊரிக்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.