மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். அதுகுறித்து அச்சப்பட வேண்டிய தேவையில்லை. அதனை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
