தொடர் மழையால் 5 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மோசமான வானிலை காரணமாகப் பெய்து வரும் மழையினால் 12 பிரதான நீர்த்தேக்கங்களும் 9 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாயும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 5 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யோத வாவி, திஸா வாவி, வேமெடில்ல, தப்போவ மற்றும் அலிகொட ஆர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

74 நீர்த்தேக்கங்கள்

அதேவேளை, இரண்டு நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க் கொள்ளளவு தற்போது 45.2 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.