இலங்கையில் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு 100 பேருக்கும் சுமார் 147 கையடக்கத் தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது.
அதேபோன்று, ஒவ்வொரு 100 பேருக்குமான நிலையான தொலைபேசிகளின் எண்ணிக்கை 12.1 ஆகக் காணப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொடர்பாடல் வசதிகள் விரிவடைந்து வருவதையே இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
