இறுதித் திகதி ஜூலை 23 என திணைக்களம் திட்டவட்டம்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் விசேட தெளிவுபடுத்தல் ஒன்றினை புதன்கிழமை (15) வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 03 ஆம் திகதி ஆரம்பமான விண்ணப்பக் கோரல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதன்போது தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.
