நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கி முடிவு

புதிய இணைப்பு

பணவீக்கம் அதிகரித்து செல்கின்றமை மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்காகவே வட்டி வீதத்தை உயர்த்தியதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம், நேற்று (25.05.2026) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்திலேயே எட்டப்பட்டுள்ளது.

ஓரிரவு கொள்கை வட்டி வீதம் உயர்வு

உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் நிலவும் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாக பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கைச் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த வருட மார்ச் மாதத்தில் ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75% ஆகப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.