யாழ்ப்பாணம், மார்ச் 29 பருத்தித்துறை நகர சபையின், 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு, நகர சபைத் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக, பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக, பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் செயலாளர் அ.நடராசா பங்கேற்றார்.
இதன்போது உள்ளூராட்சி மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், உப தவிசாளர் தேவராஜேந்திரம் மற்றும் உறுப்பினர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், பொது மக்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றனர்.
இதேவேளை, பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் தெரிவு செய்யப்பட்ட எட்டுப் பெண்களுக்கு, வாழ்வாதார உதவியாக, தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
