திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் (முக்கோணநாதர்) திருக்கோவில்

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டத்தில் கேக்கரை எனுமிடத்தின் அருகில் திருப்பள்ளி முக்கூடல் என்ற ஊரில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

1000-2000 ஆண்டுகள் பழமையான சிவாலயமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சந்திக்கும் இடமாகும் என்பது ஐதீகம், இத்தலம், ஜடாயுவுக்குச் சிவபெருமான் காட்சி தந்த தலமாகவும், முக்தித் தலமாகவும் போற்றப்படுகிறது.

தலசிறப்புகள்:

மூலவர்: முக்கோணநாதர், திரிநேத்திர சுவாமி, முக்கண் நாதர், முக்கூடல் நாதர்.
தாயார்: அஞ்சனாட்சியம்மை, மைம்மேவு கண்ணி.

தலவிருட்சம்: வில்வம், தீர்த்தமாக முக்கூடல் தீர்த்தம் (கங்கை, யமுனை, சரசுவதி நதிகள் கூடுவதாக ஐதீகம்), அப்பரால் பாடல்பெற்ற திருத்தலம். குருவி ராமேசுவரம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பாள், தபோவதனி என்ற அரசியாரின் குழந்தையாகத் தோன்றி வளர, சிவபெருமான் வேதியராக வந்து திருமணம் புரிந்த திருத்தலமாகும்.

இத்தலத்தில் மூர்க்க மகரிசி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. இக்குளத்தில் 16 கிணறுகள் உள்ளன. இங்கு தீர்த்தமாடினால் மகாமக தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும், ராமர் தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று, முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் காயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் கேக்கரை என அழைக்கப்படுகிறது , மாசி மாத சிவராத்திரி நாளில் சூரியக்கதிர்கள் சிவனின் மேல் விழுவது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோசம், திருமணத்தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்