புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவின் (ஏசல பெரஹரா) மிக முக்கியமான கொடியேற்றம் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.



கதிர்காமத்தில் இடம்பெறும் இந்த கொண்டாட்டம் சுமாராக 14 முதல் 15 நாட்கள் கொண்ட ஆடிப் பெருவிழா, தெய்வானை அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தெய்வானை அம்மன் கதிர்காம முருகனின் மூத்த தேவியாகக் கருதப்படுவதால், அன்னைக்கு முதல் மரியாதை செலுத்தும் விதமாக இந்தக் கொடியேற்றம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.