நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்!

யாழ்ப்பாணம், மார்ச் 29, முதல் நெடுந்தாரகை படகுச் சேவை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்துள்ள நெடுந்தாரகையை திருத்திச் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில் நெடுந்தாரகையை நேரடியாக பார்வையிட்டு அதனைத் தற்காலிகமாக திருத்துவதற்கான நட வடிக்கையை வடபிராந்திய கடற்படைத் தளபதி அட் மிரல் புடிக்ஹ லியனகமகே நடவடிக்கை எடுத்தமைக்கு அமைவாக இன்றிலிருந்து அது சேவையில் ஈடுபடவுள் து என தெரிவிக்கப்பட்டது.

நெடுந்தாரகையினை நிரந்தரமாக திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.