கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் 2026.05.11 முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான யாழ்தேவி ரயில் சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறும்.
இந்த ரயில் குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளை கொண்டதாகும். ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களுக்கு சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
