மன்னாரில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி

தொழில் தேடும் இளைஞர், யுவதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன் தலைமையில் இடம் பெற்ற இந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சியில் திணைக்கள தலைவர்கள், அரச மற்றும் தனியார் தொழில் வழங்குநர்கள், தொழில் பயிற்சி திணைக்கள அதிகாரிகள், வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சியைத் தேடுகின்ற பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது வேலைவாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சிகளை தேடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்கள் விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து வழங்கினர்.