புதிய நியமனங்கள் வழங்கல் நிகழ்வு

விசேட (காணி) மத்தியஸ்த சபை – புதிய நியமனங்கள் வழங்கல் நிகழ்வு

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

  • இடம்: IT Hall, வவுனியா மாவட்ட செயலகம்
  • திகதி: வெள்ளிக்கிழமை – 06.02.2026
  • நேரம்: காலை 9.30 மணி

தலைமை: திரு. செல்லத்துரை விமல்ராஜ்மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்வவுனியா & மன்னார் மாவட்டம்

பிரதம அதிதி: திரு. P.A. சரச்சந்திரமாவட்ட அரசாங்க அதிபர்மாவட்ட செயலகம் – வவுனியா

சிறப்பு அதிதி: திரு. நா. கமலதாசன்மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்மாவட்ட செயலகம் – வவுனியா

தவிசாளர், உதவித் தவிசாளர் மற்றும் மத்தியஸ்தர்கள் உட்பட மொத்தம் 23 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் தவிசாளராக எஸ். சிவகௌரி அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே காணி மத்தியஸ்த சபையின் உப தவிசாளராக கடந்த காலங்களில் கடமையாற்றி வந்துள்ளார்.
விசேட காணி மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மூலம் வவுனியா மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இவர்களது செயற்பாடுகள் மேலும் சிறப்பாக அமைய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.