உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!

யாழ்ப்பாணம், மார்ச் 12 வலய மட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது.

குறித்த போட்டியில் பூப்பந்தாட்டத்தில் 18 வயதுப்பிரிவில் முதலாமிடத்தையும், 16 வயதுப்பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

வெற்றி பெற்ற அணிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.