கரவெட்டியில் இலவச கால்நடை மருத்துவ சேவை

அண்மைய புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உதவும் விதமாக கரவெட்டி அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினால் இலவச நடமாடும் கால்நடை வைத்திய சேவை ஒன்று வைத்திய அதிகாரி எஸ். சுகிர்தன் தலைமையில் நேற்று காலை 9.30 மணியளவில் தல்லை அம்பாள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

இதில் பண்ணையாளர்களுக்கு இடர்கால பண்ணை முகாமைத்துவம், நோய்த்தடுப்பு ஆலோசனைகள், இலவச மருந்துப்பொருள்கள், இலவச நடமாடும் மருத்துவ சேவை என்பன வழங்கப்பட்டன. இதில் 50 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் பயன்பெற்று இருந்தார்கள். அத்தோடு சீரற்ற வானிலையையும் பாராது வைத்தியர்கள் ஆற்றிய இச்சேவையை பலரும் பாராட்டினர்.