உலக புவி தினம்

Visits of Current Page:257
GlobalTotal: 207031

பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22-ந் தேதியை ‘உலக புவி தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம்.

நம் மூச்சு நம் கையில் - பசுமை இந்தியா

பிரபஞ்சத்தில் தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை நேசித்துக் கொண்டாடும் நாள் இது.

அந்த வகையில் பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22-ந் தேதியை ‘உலக புவி தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம். 1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார், ஜான் மெக்கானல். இவர் உலக அமைதியை வலிறுத்தி குரல் கொடுத்து வந்தவர். அவர் அந்த கூட்டத்தில், ‘மனிதர்களும், பிற உயிரினங்களும் வாழுகின்ற இந்த பூமியின் அழகை சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழல் உருக் குலைந்து, மாசுபடாமல் பாதுகாக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்’ என்று பேசினார். அதோடு இதற்காக ஆண்டுதோறும் ‘புவிநாள்’ என்ற பெயரில் ஒரு தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அந்த நேரத்தில், ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுச்சூழலியல் நிபுணரும், மேலவை உறுப்பினருமாக இருந்த கேலார்ட் நெல்சன் என்பவர், சுற்றுச்சூழல் பற்றிய அறிவை உலக மக்களிடையே பரப்புவதற்கு, 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த நாளில்தான், புவியின் வட கோளப் பகுதியான வசந்த காலத்தையும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலத்தையும் சந்திக்கிறது. அதை கருத்தில் கொண்டு, கோலர்ட் நெல்சனின் அழைப்பை ஏற்று, 2 கோடி பேர் அந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். அது முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் 22-ந் தேதியை புவி தினமாக கடைப்பிடித்து வருகிறோம். உலகம் முழுவதும் 175 நாடுகள் இந்த தினத்தை கடைப்பிடிக்கின்றன.

பூமி தினம் சம்பந்தமாக ஒவ்வொருவரும் அறிந்து  கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ:-

The Ecology flag- happy Earth Day! : r/vexillology

பூமி தினத்திற்கென தனியாகக் கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான E மற்றும் O ஆகியவை Envirronment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.

பூமி தினத்திற்கான தனிப் பாடல் ஒன்றும் உண்டு. 1970ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இரண்டு கோடிப் பேர் இந்த முதல் பூமி தினத்தில் பங்கு கொண்டனர்.

உலகெங்கிலுமுள்ள 192 நாடுகளில் 22000க்கும் மேற்பட்டோர் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்உலகின் மிகப் பெரும் இயக்கமாக இது உருவெடுத்துள்ளதுஇன்று நூறு கோடிப் பேர் இந்த இயக்கத்தில் இணைந்து அரிய பூமியைக் காக்க சபதம் கொண்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர். இந்த நாளில் உலகெங்குமுள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கே குப்பைகளை அகற்றி வாழுமிடத்தைச் சுத்தப்படுத்துவதோடு மரக்கன்றுகளையும் நடுகின்றனர்.நம்மை உயிர் வாழ வைக்கும் பூமித் தாயை நன்றியுடன் போற்றுவதில் நாமும் இணைவோமாக!

Leave a Reply