நீர் விநியோக குழாயில் திடீர் கசிவு

நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று முற்பகல் முதல் அவசர நீர்விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் விநியோக தடை

இதற்கமைய, நாளை முற்பகல் 8.00 மணி வரை இந்த அவசர நீர் விநியோகத் தடை நடைமுறையாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

கடவத்தை, மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக குறித்த நீர்விநியோக தடை ஏற்பட்டுள்ளது.