அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு

சலனப் பகிர்வு: அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு.
மகிழ்வோடு வரவேற்று ஊக்கமளிப்போம்.

அந்தோனி “Anthony”

இந்தத் திரைப்பட முன்னோட்டம் (ட்ரெய்லர் – ஒரு நிமிடம்) பார்த்து இரசியுங்கள்.

மண் மற்றும் கடலை மையமாகக் கொண்ட ஒரு நெய்தல் வாழ்வு உணர்ச்சி பூர்வமான கதை யாழ்ப்பாணத்தின் நீல வான வரம்புகளைத் தாண்டி, அலைகளின் இதயத் துடிப்புடன் வாழும் ஒரு குடும்பத்தின் பயணத்தை இந்த படம் வெளிப்படுத்துகிறது. இசைஞானி இளையராஜா ஈழத்தமிழ் திரைப்படத்திற்கு முதற்தடவையாக இசை அமைத்துள்ளார்.

நடிகர் நிழல்கள் ரவி உட்பட பல நாட்டினர் இணைந்துள்ள முதல் ஈழத்தமிழ் திரைப்படம்.

பூர்வீகம் புலப்பெயர்வு எனப் பரவிய எமது உலகமயமாகிய வாழ்வில் இது ஒரு பதிவு.

தமிழ், சிங்களம், மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகும் முதல் ஈழத்தமிழ் திரைப்படம் என தனித்துவ தடமிடுகிறது.

இது எங்கள் ஈழத்தமிழ் சமூகத்திற்கு மிகவும் சிறப்பான பெருமைக்குரிய முன்னெடுப்பாகும்.

உலகத் திரையரங்குகளில் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவோம்.

ட்ரெய்லரை முழுமையாக பார்த்து, உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களுடனும் பகிர்ந்து ஆதரவு வழங்குவோம். நன்றி..!

சலனம்
நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்.