வரலாற்றை புரட்டி எடுக்கும் தங்க விலை

உலகச் சந்தையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது.

அதற்கமைய, 2026.01.29 அதிகாலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

2026.01.28 அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

அமெரிக்க டொலரின் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதும், கையிருப்புகளைச் சேகரிப்பதும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்குக் காரணம் என வெளிநாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலகத் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2026.01.31 நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதுடன், இது நேற்றுடன் 2026.01.31 ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சியாகும். சதவீத அடிப்படையில் இந்த வீழ்ச்சி 8.15% ஆகும்.

வெள்ளி விலைகளும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 85.34 அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன், இது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் 29.16 அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது. சதவீத அடிப்படையில் இது 25.46% ஆகும்.

இதற்கமைய, கடந்த 48 மணித்தியாலங்களில் தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையிலிருந்து சுமார் 15 டிரில்லியன் டொலர்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச வணிகச் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், தங்கத்தின் விலையானது 2025 ஆம் ஆண்டை விட இன்னும் இரண்டு மடங்கு உயர்மட்டத்திலேயே காணப்படுகின்றது.