இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

யாழ்ப்பாணம், ஜன. 30 அன்று மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி, பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் “பாட்டொன்றைப் பாடுவோம்” சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் “பிறந்தநாள் சட்டை” சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது.

தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கலை, இலக்கிய செயல்பாட்டாளர் சோ. தேவராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஆசியுரையை தெல்லிப்பழை மகாஜன கல்லூரி அதிபர் இ. புஷ்பரட்ணம், வெளியீட்டுரையை மக்கள் கலை இலக்கிய பேரவையின் செயலாளர் சபா. தனுஜன், நூல் அறிமுக உரைகளை ஸ்கந்தவரோதய கல்லூரி ஆசிரியர் சோ.சிவனேஸ்வரன், மகாஜன கல்லூரி ஆசிரியர் ந. தவசோதிநாதன் ஆகியோரும் ஆற்றினர்.

இந்த நிகழ்வில் விசேட கலை நிகழ்வுகளாக நாடக ஆசிரியர் சிறீலேகா ரின்பகுமாரின்
எழுத்துருவில், அதிபர் க. பேரின்பகுமாரின் நெறியாள்கையில் காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய மாணவர்களின் “மணிப்பூனையார்” மற்றும் சிவன் சுதன் அவர்களின் எழுத்துருவில், இ. ரஜிந்தனின் நெறியாள்கையில் “அயலார் தீர்ப்பு” ஆகிய சிறுவர் நாடகங்களும், ஹரனின் எழுத்துருவில் “நாய் கடிக்கும் கவனம்” நகைச்சுவை நாடகமும் அரங்கேறின.