முன்னே ஓர் தனி மரம் !

வண்ணமாய் வானத்து முகில்
வழி வழியே நிறம்மாற
நடந்து செல்லும் என் கால்கள்
விசை குறைய தடுமாற

சின்னதாய் களைப்பாலே
நான் சிறு நேரம் நின்ற போது
முன்னே ஓர் தனி மரம்
அது என்போலே தனியே நின்றது !

தெருவோடு திசை ஓட
திசையோடு முகில் ஓட
வெள்ளையும் கறுப்புமாய்
வானத்தில் முகில் கூட்டம் முன்னோட
எல்லை எங்கே என்வாழ்வில்
எனக்கேதும் தெரியாதே

கவிதை கிறுக்கன் -சுதேரா

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *