கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைஇலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன.

கறிவேப்பிலை | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்

இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன. தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம். தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம். ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் (பலர் என்று கூடச் சொல்லலாம்) தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். தூக்கி எரியாமல் உண்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.

கொழுப்புக்கள் கரையும்: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை: இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கான (Anemia) காரணம் இல்லை. இரும்புச்சத்தினை உறிஞ்சுவதிலும் உறிஞ்சிய இரும்புச் சத்தினைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடும் இரத்தசோகைக்கான மற்றுமொரு காரணமாகும். கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.

சர்க்கரை நோய்:சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு: புதிய கறிவேப்பிலைச் சாற்றுடன் எலுமிச்சைக் கலந்து உண்பதன் மூலம் குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக விளங்கும். அதிகப்படியானக் கொழுப்பினைக் குறைக்கப் பயன்படுகிறது. நீங்கள் விரும்பினால ஒரு சிறிய கரண்டி கறிவேப்பிலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்துப் பருக வேண்டும். மேலும் கறிவேப்பிலை மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் கொனோரியா (Gonorrhea) நோய் போன்றவற்றை சுவாரஸ்யமாகவும் திறம்படவும் கையாள்கிறது. அதோடு கறிவேப்பிலைச் சாறு பருகுவதினால் கற்பினிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் மயக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறாது

இதய நோய்: கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

கண்பார்வை

முடி வளர்ச்சியை தூண்டவும், முடி நரைப்பதை தடுக்கவும் உதவும் கறிவேப்பிலை  டானிக்...

:கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. இந்த இலைகளில் இருக்கும் வைட்டமின் ஏ கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளது. எனவே வைட்டமின் – ஏ செய்ல்பாடு கண்ணின் கார்னியா சேதமடைவற்கான ஆபத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. வைட்டமின் – ஏ குறைபாடு கண்களில் ஒரு விதமான பார்வை குறைபாட்டினை ஏற்படுத்த நேரிடலாம். கண்களில் ஏற்படும் குறைபாடுகளில் குருட்டுத்தன்மை, பார்வை இழப்பு, மாலைக் கண் நோய் போன்றவற்றைக் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்தக் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளைக் கறிவேப்பிலை குறைக்கவும் மேலும் முற்றிலுமாகக் குணம் பெறவும் கூட உதவுகிறது. இதனால் கறிவேப்பிலை இலைகளை அதிகம் உண்பதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் – ஏ கண்களில் குறைபாடு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

செரிமானம்: நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.கறிவேப்பிலை வயிற்றுப் போக்கிற்கு சிறந்தத் தீர்வாக உள்ளது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) உள்ளன. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்க்கும் சக்க்தியினைக் உடலுக்குத் தருகின்றன. எனவே பாக்டீரியாவிற்கான எதிர்ப்புச் சக்தி கறிவேப்பிலையில் இருப்பதனால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த நிவாரணமாக உள்ளது.

கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் சரியாகும்னு  தெரியுமா? | How To Use Curry Leaf (kadi patta) Juice For Gastric Problem &  Diarrhoea - Tamil BoldSky

கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும். மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய்க்கான மற்று மருந்தாக இருக்க முடியும்.கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.

முடி வளர்ச்சி: கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கம்: சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

தோலில் ஏற்படும் நோய்த் தொற்றினைக் குணப்படுத்துகிறது: கறிவேப்பிலை இலைகளில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants), பாக்டீரியா எதிர்ப்பொருள் (Antibacterial) மற்றும் அழற்சி எதிர்ப்பொருள் (Anti-inflammatory) போன்ற எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளன. எனவே கறிவேப்பிலை இலைகள் நோய்த் தொற்றுகளுக்கான மிகப்பெரியத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாகப் பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளில் முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது. கறிவேப்பிலை நோய்த் தொற்றினைக் தடுப்பதற்குக் காரணம் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆகும்.

கீமோதெரபி பக்க விளைவுகளைக் குறைக்கிறது: புற்று நோய்க்கு எதிராக அளிக்கப்படும் சிகிச்சைகளில் முக்கியமானவை கதிரியக்க சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை (ஆங்கிலத்தில் கீமோதெரபி என்பர் – Chemotherapy) ஆகும். இத்தகைய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போது பிற விளைவுகளையும் ஏற்படுத்த நேரிடலாம். வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை முறைகளால் ஏற்படும் பின் விளைவுகளில் மன அழுத்தம், முடி உதிர்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் கறிவேப்பிலையை வழக்கமாகச் சாப்பிட்டு வந்தால் வேதிச்சிக்கிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை எளிதில் குறைத்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை உட்கொள்வதனால் புற்று நோய் சிகிச்சையின் பாதகமான விளைவுகளிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொள்வது குரோமோசோம்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவற்றை உடலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் இலவச கதிரியக்கத்தினால் பாதிக்கப்படுவதைத் திறம்படத் தடுக்கிறது.

கல்லீரல் பாதிப்பு: நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். கல்லீரல் சேதமடைவதிலிருந்து கறிவேப்பிலையால் பாதுகாக்க முடியும். ஏனெனில் கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ மற்றும் வைட்டமின் – சி உடன் கேம்ப்ரல்பல் (Camprefol ) என்னும் சத்துக்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள் கல்லீரல் சுமூகமாகச் செயல்படுவதற்கு மிகவும் உதவி செய்கின்றன. இதனால் நாம் உண்ணும் கறிவேப்பிலை இலைகள் நம்முடையக் கல்லீரலைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன,மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை. தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள். குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்?

உடலுக்கு சக்தி தரும் கறிவேப்பிலை ரசம் – Eelam News

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்: கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய்,இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார்

benefits of green leaves for hair growth: ஆறடி கூந்தல் வேணும்னா கறிவேப்பிலை  மட்டுமே போதும் ஆனா இப்படிதான் பயன்படுத்தணும்! - Samayam Tamil

.சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில்10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *