கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

உங்களுக்கு உண்மையாகவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா?

கோபம் ஆண்களின் பிறவி குணம் என்பார்கள். இந்த பிறவி குணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.

Ralph Waldo Emerson

மன அழுத்தம் அதிகரிப்பதால் உடலில் தேவையற்ற உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் உங்களுக்கு தான் வீண் விரயம். கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம். சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லை கடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச்மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
கோபம் ஏன் ஏற்படுகிறது?

ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது!

ஆம்! நமக்கு பிடிக்காதவற்றை மற்றவர் சொல்லும்போது,எழுதும்போது,கேட்கும்போது,படிக்கும்போது,செய்யும்போது…..
இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம்.

சரி! நாம் நம் கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்?
1. வெறுப்பு
2. பழிவாங்குதல்
3. அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்தல்
4. தவறான விதத்தில் பேசுதல்/எழுதுதல்/செயல்படுதல்
5. அடித்தல்/வன்முறை
6. முக உடல் அசைவுகளில் அதை காண்பித்தல்


இதுபோன்று பல விதங்களில் கோபத்தை காண்பிக்கிறோம். ஒருவரை பார்ப்பதை, அவரிடம் பேசுவதை தவிர்த்தல், தங்களது பொறுப்புகளை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது, மற்றவர்களை குற்றம் சாட்டுவது, தங்களையே குற்றம் சாட்டி கொள்வது இப்படி பலவிதங்களில் நாம் கோபத்தை காண்பிக்கிறோம்.

இவை அதிகமாகும் போது பலவித பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதை தெரிந்துகொள்ளும் முன் கோபப்படும்போது நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என பார்ப்போமா?

1. இதய துடிப்பு அதிகரிக்கிறது.
2. இரத்த அழுத்தம் அதிகமாகிறது
3. சில நாளமில்லா சுரப்பிகள் வேகமாக சுரக்கின்றன.
4. தசைகள் வேகமாக இயங்குகின்றன.
5. மூச்சு விடுதல் வேகமாகிறது.
6. மூளையில் நரம்பு செயல்பாடு அதிகரிக்கிறது.
7. உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

கோபப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள்:

படபடப்பு - ஆரோக்கியம் - 2021

நீங்கள் கோபமாக இருக்கும்போது எப்போதாவது உங்கள் இதயத்தை தொட்டு பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் அதை செய்யுங்கள்… (இதனால் கோபம் சிறிது குறைய வாய்ப்புள்ளது). கோபப்படும்போது இதயம் வேகமாக துடிப்பதால், அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கொழுப்பு/சர்க்கரை வியாதி இருந்தால் அவ்வளவுதான்!

கோபப்படும்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால் மேற்கண்ட பிரச்சினை இரட்டிப்பாகிறது.  கோபப்படும்போது நம் உடலின் சமச்சீர் தன்மை சீர்குலைகிறது.

சரி இவ்வளவுதானா! என்றால் இல்லை, சிலர் கோபமாக இருக்கும்போது.. சிகரெட், மது போன்றவற்றை தேடி செல்கின்றனர். மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கின்றனர். சிலர் நாள்பட்ட கோபத்தை டிவி, கம்ப்யூட்டர் முன் நேரத்தை கழிப்பதன் மூலம் மறக்கப் பார்க்கின்றனர்.

இவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பலப்பல..

  • கோபம் வேலை சூழலை/வியாபாரத்தை பாதிக்கிறது.
  • கோபம் திருமண வாழ்வை/குடும்ப அமைதியை பாதிக்கிறது.
  • கோபம் சமூக/குடும்ப உறவுகளை பாதிக்கிறது
  • கோபம் உடல்நலத்தை பாதிக்கிறது.
  • கோபம் உங்கள் மன நலத்தை பாதிக்கிறது.
  • எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல.

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

1.கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2.கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3.அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4.நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5.செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6.அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

7. ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

8.கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

9.உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

10. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

11. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம்  இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.

12. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

13. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

14. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். வாழ்க்கை நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதை கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல்,  மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *