வாட்ஸ் அப் செயலியானது தனது தளத்தை மேம்படுத்துவதோடு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு பதிப்பு பயனர்களுக்கு View Once என்னும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்:
தகவல் உரையாடலுக்கு பயன்படுத்தும் செயலிகளில் மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்த செயலி தான் வாட்ஸ் அப். காரணம் தகவல் பரிமாற்றத்துடன் போட்டோ, வீடியோ போன்றவையும் பரிமாற்றி கொள்ளும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது. மேலும் இந்த செயலி மூலம் பண பரிவர்தனையும் மேற்கொள்ள இயலும். இது போன்ற பல அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு வழங்கி வருவதால் இந்த செயலியை அதிக அளவிலான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது தளத்தை மேம்படுத்தி View Once என்னும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு 2.21.14.3 பதிப்பு பயனர்களுக்கு வெளியிடுகிறது. இந்த பதிப்பை பயன்படுத்தும் பீட்டா பயனர்களுக்கு தற்போது வரை இந்த அம்சம் வரவில்லை என்றால் விரைவில் இந்த அம்சத்தை பெற முடியும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த அம்சத்தை பயன்படுத்தினால் பயனர்கள் பிறருக்கு அனுப்பும் போட்டோ அல்லது வீடியோக்களை அவர்கள் ஒரு முறை பார்த்த பின்பு அவை தானாக நீங்கி விடும். மேலும் இந்த அம்சத்தை பயன்படுத்தும் போது நீங்கள் அனுப்பிய போட்டோ அல்லது வீடியோ அவருக்கு சென்று விட்டதா என்பதையும் அவர்கள் அதை பார்த்து விட்டார்களா என்பதையும் உங்களால் அறிய முடியும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது..