Whatsapp குறிப்பிட்ட ஸ்மார்ட் போன் மாடல்களில் செயல்படாது

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலி வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட் போன் மாடல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப் செயலி:

தகவல் பரிமாற்றத்தில் உலக அளவில் பெரும் புரட்சியை செய்துள்ளது வாட்ஸ்-அப் செயலி. பிளே-ஸ்டோரிலிருந்து 500 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ள இந்த செயலி, உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையவசதி மூலம்  குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின்  மாபெரும் வெற்றிக்கு காரணமாக உள்ளது.  டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் செய்வதோடு இந்த செயலியில் புகைப்படங்கள், வீடியோக்களும் உள்ளிட்டவற்றையும் எளிதாக அனுப்ப முடிகிறது. இது பயனாளர்களை கவரும் முக்கிய அம்சமாகவும் உள்ளது.

அடுத்தடுத்து வரும் அப்டேட்:

மெட்டா நிறுவனம், வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்துவதில் பயனர்களை திருப்தி அடைய செய்வதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால் அவ்வப்போது பயனர்களுக்கு இலகுவான விஷயங்களை அப்டேட் செய்து, செயலியை மென்மேலும் மெருகேற்றி வருகிறது. அந்த வகையில் வழங்கப்படும் அப்டேட்கள், ஆரம்ப காலங்களில் அறிமுகமான ஸ்மார்ட் போன்களில் கிடைப்பது என்பது சிரமமானதாக உள்ளது. இதன் காரணமாக, பழைய மாடல் ஸ்மார்ட் போன்களில் தங்களது வாட்ஸ்-அப் செயலியின் சேவையை மெட்டா நிறுவனம் படிப்படியாக நிறுத்தி வருகிறது.

சேவையை நிறுத்தும் வாட்ஸ்-அப் செயலி:

அந்த வகையில் தான், வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் 49 ஸ்மாட் போன் மாடல்களில், இனி வாட்ஸ்-அப் செயலி சேவை வழங்கப்பட மாட்டாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, ஆப்பிள், சாம்சாங், ஹுவாய் மற்றும் பல நிறுவனங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன்களில் சேவை நிறுத்தப்பட உள்ளது. அவை பெரும்பாலும் பல ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமான செல்போன் மாடல்கள் என்பதும், அவற்றில் பல மாடல்கள் இந்தியாவில் அறிமுகமே ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்-அப் சேவையை இழக்கும் ஸ்மார்ட்போன்கள்:

Apple iPhone

Apple iPhone 5

Apple iPhone 5c

Arcos 53 Platinum

Grand S Flex ZTE

Grand X Quad V987 ZTE

HTC Desire 500

Huawei

Huawei Ascend D1

Huawei Ascend D2

Huawei Ascend G740

Huawei Ascend Mate

Huawei Ascend P1

Quad XL

Lenovo A820

LG

LG Enact

LG Lucid 2

LG Optimus 4X HD

LG Optimus F3

LG Optimus F3Q

LG Optimus F5

LG Optimus F6

LG Optimus F7

LG Optimus L2 II

LG Optimus L3 II

LG Optimus L3 II Dual

LG Optimus L4 II

LG Optimus L4 II Dual

LG Optimus L5

LG Optimus L5 Dual

LG Optimus L5 II

LG Optimus L7

LG Optimus L7 II

LG Optimus L7 II Dual

LG OptimusNitro HD Memo

ZTE V956

Samsung Galaxy

Samsung Galaxy Ace 2

Samsung Galaxy Core

Samsung Galaxy S2

Samsung Galaxy S3 Mini

Samsung Galaxy Trend II

Samsung Galaxy Trend Lite

Samsung Galaxy Xcover 2

Sony Xperia

Sony Xperia Arc S

Sony Xperia Miro

Sony Xperia Neo L

Vigo

Vigo Six Five

Vigo Darknight ZT

இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு இந்த ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் இயங்காது என்றும், இந்த பழைய மாடல் ஸ்மார்ட் போன்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்காது என்பதால் பயனர்களின் பர்சனல் தகவல்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *