An Alternative to SUGAR/சர்க்கரைக்கு மாற்றாக சர்க்கரை துளசி..

Visits of Current Page:508
GlobalTotal: 230607

தற்போது பல சமூக வலைதளங்களின் பேசுபொருளாக இனிப்பு துளசி என்கிற தாவரத்தை பற்றிய செய்திகளே அடிபடுகிறது. அப்படிதான் இதில் என்ன இருக்கிறது என்று தேடி பார்த்ததில் கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்.

Stevia rebaudiana flowers.jpg

ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்புத் துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. மேலும், இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.

மனிதனின் தினசரி உனவு முறைகளுள் சர்க்கரையானது முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சர்க்கரையானது, கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதே ஆகும். கரும்பு சர்க்கரையானது அதிகமான கலோரிகளைக் கொண்டுள்ளதால், சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை, கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனைக் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாகவும், செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு மற்றும் ரெபடையோசைடு என்னும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால், கரும்பைவிட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. மேலும், ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் 15- முதல் 20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. உலர் இலைகளில் ரெபடையோசைடு – ஏ 2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.

நன்மைகள்:
· இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.
· இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை.
· ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.
· சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.

. Stevia நீங்கள் மிதமான முறையில் உண்ணும் வரை ஆரோக்கியமாக உள்ளது, . இருப்பினும், பெரும்பாலான ஸ்டீவியா வாயு, குமட்டல் மற்றும் சிறுநீரக மற்றும் கல்லீரலில் வீக்கம் ஏற்படலாம்.

YOU TUBE இணைப்பு ஒன்று

Leave a Reply