நினைவு அஞ்சலி
பாதியாய் குறைந்துபோன மேனியோடு உன்னை
நான் பார்த்தபோது ஏனய்யா இப்படி என்றேன் .
கொஞ்சம் உடல் நலமில்லை மருந்துன்பதால் இப்படி
விரைவில் மாறிப்போகும் என்று சிரித்த
முகத்திரை போட்டு மூடி மறைத்தீரே ,
வீரமாய் விளையாட்டாய் வீசிய உன் சொல் எங்கே ?
விதி செய்த செயலால் நீ
சொல்லாமல் போனது ஏனய்யா ?
சாவு ஒன்றும் புதிதல்ல –
உனக்கு ஏது மரணம் -உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் கண்ணுக்குள் வந்து
கொண்டுதான் இருக்கிறது கண்ணீராய்
நீ எங்களை விட்டு போகவில்லை
நினைவுகளில் இருக்கிறாய் –
எங்கள் இதயத்தில் இருக்கிறாய்
உன்னதமான உயிருக்கு என்
இதய அஞ்சலி
சகோதரன் ஸ்ரீதர்