முகத்தில் இருக்கும் வெண்புள்ளி திட்டுகள்>>வெள்ளை தழும்பு நோய்????

முகத்தில் இருக்கும் வெண்புள்ளி திட்டுகள் வேகமாக மறைய என்ன செய்யலாம்?

முகத்தில் வெண்புள்ளி தென்படுகிறதா. அச்சப்படவும் வேண்டாம். அலட்சியப்படுத்தவும் வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு இயற்கையான முறையில் அவற்றைப் போக்கலாம்.

சருமப் பராமரிப்பு என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. உடல் ஆரோக்கியம் குறையில்லாமல் இருப்பவர்கள் கூட முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே வெண் புள்ளிகளைப் போல், வெள்ளை நிற வட்ட திட்டுக்கள் போன்றிருக்கும் தேமலை கொண்டிருக்கிறார்கள்.

சருமப் பிரச்சனை என்றழைக்கப்படும் தேமல் வயது பேதமின்றி குழந்தைகளையும் தாக்குகிறது என்கிறார்கள் சருமநோய் நிபுணர்கள். முறையற்ற உணவுப்பழக்கமும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

தினமும் கண்ணாடி முன்பு நிற்கும் போது முகத்தை சில விநாடிகளாவது உற்று நோக்குங்கள். முகப்பரு, கரும் தழும்புகள், முகப்பருக்கள் தாண்டி முகத்தில் வெண் புள்ளி வட்ட திட்டுகள் இலேசாக தெரிய தொடங்கினாலே அதற்கான பராமரிப்பை செய்ய தொடங்குங்கள்.

முகத்தில் வட்ட வடிவில் தென்படும் வெண்புள்ளி திட்டுகளை அலட்சியப்படுத்தும் போது அவை முகம் தவிர இதர பகுதிக ளுக்கும் வேகமாக பரவ வாய்ப்புண்டு என்பதால் வீட்டில் இருக்கும் இயற்கை பொருள்களைக் கொண்டு அவற்றைக் கட்டுப் படுத்த வேண்டும்.

அதிகப்படியாக பரவும் போது அதற்கான பராமரிப்பு முறைகளும் செலவும் கூடுதலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத னால் ஆரம்பத்திலேயே இயற்கையான முறையில் தேமலைக் குறைக்கும் வழிமுறையைத் தெரிந்து கொள்வது நல்லது. அதிலும் நம் முன்னோர்களின் வழிமுறையில் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

முகம், கழுத்து, கை, கால் என்று ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் படரும் திட்டுக்களைத் தடுக்க என்ன செய்வது என்று திணறிக்கொண்டிருப்பவர்கள் ஆரம்பத்திலேயே வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு இயற்கை வைத்தியத்தைக் கடைப்பிடித்து அதை எளிதாக போக்கலாம்.

வெள்ளை நிற வட்டத்திட்டுகள்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், வைட்டமின் பி12 பற்றாக்குறை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதற்குண்டான பராமரிப்பினூடே உணவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

இதைக் கட்டுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்?
சோற்றுக்கற்றாழை
கற்றாழை மடலை இரண்டாக வெட்டி வெள்ளை நிற வட்டதிட்டுகள் மேல் ஐந்து நிமிடம் தொடர்ந்து மசாஜ் செய்து வரவேண் டும். ஓரிடத்தில் மசாஜ் செய்த பிறகு சருமத்தின் பிற இடங்களில் அதையே தேய்க்க வேண்டாம்.

சிறு சிறு மடல்களாக வெட்டி முகத்தில் கழுத்தில் கை கால்கள் என்று எங்கெங்கு திட்டுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஐந்து நிமிடங்கள் குறையாமல் மசாஜ் செய்யுங்கள். காலை அல்லது இரவு நேரங்களில் இதைச் செய்து வாருங்கள். தொடர்ந்து பதினைந்து நாட்களில் வட்டதிட்டுகள் மறைந்து வருவதைக் காணலாம்.

மூலிகை கசப்பு மருந்து
இது தேமலுக்கும் கசப்பு தரக்கூடியது என்று சொல்லலாம். வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து கெட்டியான பசுந் தயிரில் குழைத்து திட்டுகளின் மேல் தடவி வரவும். அவை காய்ந்ததும் வேப்பிலை ஊறவைத்த நீரை கொண்டு அலசி வந் தாலும் திட்டுகள் நிறம் மங்க தொடங்கும். தினமும் குளிப்பதற்கு முன்பு வேப்பிலை ஊறவைத்த நீரை குளிப்பதும் நன்மை பயக்கும்.

வேப்பிலையை மட்டுமாக கூட அரைத்து விழுதாக்கி தடவி வரலாம். சருமப்பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கும் வல் லமை குணம் வேப்பிலைக்கு உண்டு. அன்றாடம் வேப்பிலையைப் பயன்படுத்துவதில் சிரமம் இருந்தால் வேப்பங்கொட் டைகளைச் சேகரித்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துகொண்டு சுத்தமான தேனில் குழைத்து தடவி வரலாம். வேப் பம் பூக்களையும் தனியாக சேகரித்து பொடித்து பயன்படுத்தலாம்.

துளசி
துளசியும் கிருமிகளை வெளியேற்றும் குணத்தைக் கொண்டிருப்பதால் துளசியை விழுதாக்கியும் வட்ட திட்டுகளின் மேல் தடவி வரலாம். குறிப்பாக கருந்துளசியை பயன்படுத்துவது விரைவான முன்னேற்றத்தைக் கொடுக்கும். துளசி விழுதை தேனில் குழைத்து சாப்பிடவும் செய்யலாம். வட்ட திட்டுகளின் நிறமாற்றத்துக்கு இவை துணைபுரியும்.

குப்பைமேனி
குப்பை மேனி இலைச்சாறுடன் சிட்டிகை சுண்ணாம்பு, கல் உப்பு பொடித்து கலந்து தடவி வரலாம். நாள் ஒன்றுக்கு ஐந்து முறை வரை சாறு காய காய இதைப் பயன்படுத்தலாம். அதன் பிறகு கெட்டித் தயிரை முகம் முழுக்க பூசி வேப்பிலை ஊறவைத்த நீரால் கழுவினால் முகம் முழுக்க வெண் புள்ளிகள் வட்ட திட்டுகளாய் இருந்தாலும் நிறம் மங்கி அந்த இடம் முழுக்க சரும நிறத்துக்கு இணையாக வரும்.

மருதாணியும் ஆவாரம் பூவும்
மருதாணி இலைகளுடன் ஆவாரம் பூ சேர்த்து சாறு பிழிந்து தடவி வந்தால் வெண் புள்ளி திட்டுகள் மறையும் போது தனி நிற மாக இல்லாமல் சரும நிறத்தைக் கொண்டிருக்கும். மருதாணி போடுவதால் சிவப்பு நிறமாக மாறுமோ என்று பயப்பட வேண்டாம்.

முகத்துக்கு மஞ்சள்
மஞ்சள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, முகப்பருக்கள், கட்டிகள் மட்டும் நீக்காமல் முகத்தில் இருக்கும் வெண் திட்டுகள், தேமல் போன்றவற்றையும் நீக்கும். காலையில் இல்லையென்றாலும் இரவு நேரங்களில் கிழங்கு மஞ்சளை உரைத்து திட்டு கள் மட்டுமல்லாமல் முகம் முழுவதும் பூசி உலர விட வேண்டும். மறுநாள் காலை வேப்பிலை ஊறிய நீரால் கழுவி வந்தால் தேமல், வெண் புள்ளி பிரச்சனைகள் நீங்கும்.

இந்த இயற்கை மூலிகைகளை வேறு எங்கும் தேடி செல்ல வேண்டியதில்லை. வீட்டிலோ வீட்டின் அருகிலோ கூட எளிதாக கிடைக்கும். இவை தவிர வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்களையும் கொண்டும் இந்த வெண் புள்ளி வட்ட திட்டுகளைச் சரிசெய்யலாம்.

எதையும் தொடக்கத்திலேயே கவனித்துவிட்டால் நிச்சயம் சரி செய்து விடலாம். குறிப்பாக சருமப் பராமரிப்பில் கூடுதல் கவனம் இருந்தால் அவை முகம் தாண்டி கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் பரவாமல் தடுத்து இயற்கையிலேயே அழகாக வைத்து கொள்ளலாம்.

Loading

Spread the love

One thought on “முகத்தில் இருக்கும் வெண்புள்ளி திட்டுகள்>>வெள்ளை தழும்பு நோய்????

  1. தகவலுக்கு நன்றி .இது போன்ற மருத்துவ குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *