+சோளம் (Great millet)என்ற சிறு தானியம் பற்றி தெரிந்து கொள்வோம்

மக்காசோளம்

சோளம்

சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரமாகும் . இவற்றில் சில வகைகள் தானியங்களுக்காகவும் வேறு சில வகைகள் கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இன்னும் சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. சோளம் உலகம் முழுவதும் மிதமான தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.

சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். இதற்கு சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்ற வேறு பெயர்களும் உண்டு.

சோளத்தின் வகைகள்

மக்காசோளம்,வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம், என பலவகைப்படும்.

சிவப்பு சோளம்
வெண்சாமரச் சோளம்
வெள்ளை சோளம்

சோளத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

சோளம் அரிசியைப் விட பல மடங்கு சத்துக்களை கொண்ட ஒரு உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்., வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன.

சிவப்பு சோளம்

சிவப்பு சோளம்

சிவப்பு சோளம் செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடிய ஒரு முழு தானியம் ஆகும் உடலில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையை போக்கக்கூடியது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கூந்தலின் வளர்ச்சிக்கும் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான புரதச்சத்து இரும்புச்சத்து கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சிவப்பு சோளம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை தந்து உடலை வலுப்பெறச் செய்கின்றது மேலும் உடல் எடை அதிகம் ஏராமல் பாதுகாக்கின்றது

    வெள்ளை சோளத்தின் நன்மைகள்

    வெள்ளை சோளம்

    மக்காசோளம் தான் நம்மில் பெரும்பாலனவர்கள் சாப்பிட்டிருப்போம். ஆனால் வெள்ளை சோளம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. வெள்ளை சோளத்தில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றது என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

    இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

    வெள்ளை சோளத்தில் இருக்கும் அதிகபடியான நார்சத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் இரத்தம் சுத்தமாகவும், கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும். மாரடைப்பு வராமல் வெள்ளை சோளம் இதயத்தை பாதுகாக்கின்றது.

    எலும்புகள் பலப்படும்

    வெள்ளை சோளத்தில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலுவடைய செய்கின்றது. வெள்ளை சோளம் வயது முதிர்வால் ஏற்படும் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு வலு பெறுவதுடன் தேய்மானம் சரிசெய்யப்படுகின்றது.

    சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்

    சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் செள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது.

    ஒவ்வாமையை தடுக்கும்

    நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது போன்ற அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் வேர்வை அதிகம் தங்குவதால் சருமம் பாதிப்புக்குள்ளாவதாலும் இது போன்ற ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றது. இது அதிக எரிச்சலுடன் கூடிய அரிப்பு மற்றும் தோல் குறிப்பிட்ட இடத்தில் உரிந்து சிவப்பு நிறமாக காணப்படும். வெள்ளை சோளத்தை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

    செரிமானத்திற்கு ஏற்றது

    சோளத்தில் அதிகமான நார்சத்தும் மற்றும் மாவுசத்தும் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய வைக்கின்றது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதிலிருக்கும் நார் சத்து உணவு மண்டலத்தை சுத்தம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

    உடலை வலுப்படுத்தும்

    வெள்ளை சோளத்தில் தேவையான மினலர்ஸ், இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உள்ளதால் உடல் சுழற்சி முறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை தானாக சரிசெய்கின்றது. உடலுக்கு தேவையான புத்துணர்சியை தந்து உடலை வலுபெற செய்கின்றது.

    உடல் எடையை குறைக்கின்றது

    வெள்ளை சோளத்தில் நார் சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கின்றது. உடல் எடை அதிகம் அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது.

    நோய் எதிர்ப்பு சக்தி

    வெள்ளை சோளத்தில் போதுமான அளவு  நோயை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.

    ஆற்றலை அதிகரிக்கின்றது

    உடல் அதிகம் சோர்வடையாமல் காக்கின்றது. உடலுக்கு தேவையான சக்தியை தந்து பலப்படுத்துகின்றது. உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் பாதுகாக்கின்றது. காலை உணவாக வெள்ளை சோளத்தை எடுத்துக்கொள்வது நல்லது.

    குறைந்த இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது

    குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை சோளம் தடுக்கின்றது. இதிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் வெள்ளை அனுக்களை எதிர்த்து போராடும். இதனால் குறைந்த இரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மயக்கம், அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

    மக்காசோளம்

    சோளம் வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர்.

    சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இந்த நார்ச்சத்து மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கிறது.

    மற்ற ஊட்டச்சத்துக்களை போல ஃபோலிக் ஆசிட் எனப்படும் போலிக் அமிலமும் மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது. இந்த போலிக் அமிலம் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் சராசரி எடைக்கும் குறைவாக பிறக்கும் நிலை உண்டாகிறது. கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.

    கலோரி சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவுப் பொருளாக சோளம் இருக்கிறது. 100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கின்றது. எனவே தான் இந்த சோளத்தில் இருக்கின்ற மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பொருட்கள் விரைவில் உடல் எடை கூடுவதற்கு உதவுகிறது. சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடகாத்திரமான எடையை பெற முடியும்.

    சோளத்தை பச்சையாக சாப்பிடுவதாலும், சோளத்திலிருந்து பெறப்படும் சோள எண்ணெய்யை உணவு பயன்பாட்டிற்கு உபயோகிப்பதாலும் இதய நலம் காக்கபடுவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

    Loading

    Spread the love