சாமந்திப்பூ மருத்துவக் குணம்

இயற்கையின் உன்னதப் படைப்பில் அனைத்தும் அழகே, அதிலும் மகத்துவமானது மலர்கள்.

சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். இதன் மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது அமோனியாவை நீக்கும்.
இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இதனால் இதை அதிக இடங்களில் பயிரிடுகின்றனர். இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

சாமந்திப்பூ

கிராமப்புறங்களில் ‘துலுக்கச் சாமந்தி’ என்று குறிப்பிடுவார்கள். சிராய்ப்பு, காயங்கள், தோல் வியாதிகள், தீக்காயம், சொறி, சிரங்கு, மூல நோய் போன்றவற்றுக்கு இதை அரைத்துப் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கல், குடல் புண்கள், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இது அருமருந்து. தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட மாரிகோல்ட் உதவுகிறது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டி. சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் வேகமாய் வளரும். இதன் வாசனை பிரச்னை இல்லை என்றால், கொசுக்கள் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறையிலும் மாரிகோல்ட்டை வைத்து வளர்க்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால் போதும். நன்றாக வளரும், கொசுக்களை விரட்டும்.

சாமந்திப் பூவின் சகல அழகு குறிப்புகளையும் பார்ப்போம்

சாமந்திப்பூ கொதிக்க வைத்த தண்ணீர் ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதில் ஃபிரெஷ் ஆவாரம் பூ ஒரு கப் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்குங்கள். ஒரு காட்டன் துணியால் இந்தத் தண்ணீரைத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுங்கள். முகத்தில் உள்ள திட்டுக்கள், கரும்புள்ளிகள் நீங்கி, நல்ல கலர் கிடைக்கும்.

உலர்ந்த சாமந்தி, உலர்ந்த ஆவாரம் பூ இரண்டையும் தலா அரை கப் எடுத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடரை பாலில் கலந்து முகத்தில் பூசி வர, மாசு – மரு இல்லாமல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

துலுக்க சாமந்தி – 5, சர்க்கரை – அரை கப், ஜாதிக்காய், மாசிக்காய் தலா 5… இவற்றைத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை உடல் முழுவதும் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். மாதம் ஒரு முறை இப்படிக் குளிப்பதால் தோலில் இறந்த செல்கள் நீங்கி, புது செல் உருவாகி மேனி பளபளவென மின்னும்.

“சாமந்திப் பூ முறையற்ற உடல் உஷ்ணத்தைப் போக்கி பலத்தைத் தருகிறது.

சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர, மலச்சிக்கல் குணமாகும். முறையற்ற மாதவிடாய் கோளாறும் சரியாகும். வயிறு உப்புசம் நீங்கும்.

பூவை கடாயில் போட்டு சூடாக்கி, துணியில் கட்டி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடியாக வீக்கம் குறையும்.

மூலிகைக் கடைகளில் சாமந்திப் பூவில் தயாரித்த ‘மதர் டிஞ்சர்’ விற்கப்படுகிறது. இதை, அடிபட்ட புண்ணில் தடவினால் சீக்கிரம் ஆறி விடும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 2 துளி உள்ளுக்கு சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.

ஒரு சில வகை கேன்சர் நோய்க்கும் இது மருந்தாக பயன்படுகிறது. காதடைப்பு இருந்தால், காதில் ஒரு துளி விட்டுக்கொண்டால் போதும். உடனடியாக சரியாகிவிடும்.

உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்த தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.

மலச்சிக்கல்தான் நோயின் முதல் அறிகுறி. மலச்சிக்கல் என்பது மலம் வெளியேறாமல் இருப்பது மட்டுமல்ல, மலம் அடிக்கடி வெளியேறுவதும் அல்லது சிறுகச் சிறுக வெளியேறுவதும் மலச்சிக்கலின் காரணம்தான். இவர்கள் சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

சிறுநீர் பெருக்கி

சாமந்திப் பூவை நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *