ஓட்ஸ்… (Oats.) நிஜமாகவே நல்லது தானா??

ஓட்ஸ் என்ற பெயருடைய தானியம் இன்றைய கால கட்டத்தில் ரொம்பவே பிரபலம். அரிசி கோதுமைக்கு அடுத்தபடியாக , ஓட்ஸுக்கும் , நம் வீட்டு சமையல் அறைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு.  ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம்.. மேலும் நெடு நேரம் வரை பசி தாக்கு பிடிக்கவல்லது.. சர்க்கரை நோயால் வருந்துபவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த ஓட்ஸ்…   ஓட்ஸ் நம் இருதயத்துக்கு மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கவல்லது.சிறிது காலம் முன்பு வரை மேகி நூடுல்ஸ் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே… அதன் வழியிலே , உடனடி ஓட்ஸ் இப்பொழுது ரொம்பவே பிரபலம். இவ்வளவு தூரம் மக்கள் மனதில் ஒரு பிரதான இடம் பெற்றிருக்கும் ஓட்ஸ்  தானியம் நிஜமாகவே நல்லது தானா??

காலை நேரத்தில் ஓட்ஸ்  கஞ்சியை உணவாக எடுத்து கொள்பவர்கள் , நாள் முழுக்க சக்தியோடு விளங்குவார்கள்! ஏனெனில், அது கொஞ்சம் கொஞ்சமாக  நாள் முழுக்க , உடம்புக்கு சக்தியை வெளியிடும் வல்லமை மிக்கது! ஒட்ஸில் வைட்டமின்கள் , மினரல்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதனால் , ஓட்ஸினால் செய்யப்படும் கஞ்சி மிகுந்த சத்தான  உணவாகவே  மதிப்பிடப்படுகிறது! ஆனால், யாருக்கும் அவ்வளவாக தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஓட்ஸ்   பைட்டிக் அமிலம் (Phytic Acid) நிறைந்தது. இந்த  பைட்டிக் அமிலத்தை  , நம் இரைப்பையால்  ஜீரணிக்க இயலாது! இந்த பைட்டிக் அமிலம் நம் இரைப்பையில் ,சும்மா இருக்காமல் , இரும்பு , கால்சியம்  , சின்க் , மெக்னீசியம்  போன்றவற்றை தன்னோடு சேர்த்து கொண்டு , நம் உடம்புக்கு தேவையான சத்துக்கள் எதையும் உறிஞ்ச விடாது செய்து விடும்.

இந்த பைட்டிக் அமிலத்தை   மட்டும் நீக்கி விட்டால் , ஓட்ஸ் கஞ்சி  நிஜமாகவே சத்தான உணவு தான்! அது எப்படி என்று அடுத்து பார்க்கலாம். ஓட்ஸ் கஞ்சி  காலையில் செய்ய போகிறீர்கள் என்றால் , முதல் நாள் இரவே , ஓட்ஸை தண்ணீரில் ஊற போட்டு விட வேண்டும். அதிலே கொஞ்சம் தயிர் அல்லது மோரை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் , பாப்பரை மாவு  (Buck Wheat Powder )

Buck Wheat

அல்லது முழு கோதுமை மாவு கொஞ்சம் இதிலே ஊற போட வேண்டும். இந்த பாப்பரை யில் பைடேட் நொதி (Phytate Enzyme)அதிகமாக இருப்பதனால், அது ஓட்ஸில் உள்ள பைட்டிக் அமிலத்தை உடைத்து , ஒன்றும் இல்லாது  செய்து விடும்!மறு நாள் காலையில் , மேலே குறிப்பிடப்பட்ட வேதியல் நிகழ்வுகளால் , ஊற போட்ட ஓட்ஸ் , கஞ்சி கிண்டப்படும் போது , அதி விரைவாக வேகவும் செய்யும் , அதே நேரத்தில் , நம் இரைப்பையில் எளிதில் முழுமையாக ஜீரணிக்கப்படும் உணவாக மாறி இருக்கும்! ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கப் பெறும்  என்பதில் எந்த ஐயமும் இல்லை !

சர்க்கரை நோயால் அவதி படுபவர்களுக்கு ஓட்ஸ் கஞ்சி , சிறந்த உணவு என ஏற்கனவே அறிந்தோம்.. இனி சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த வகை ஓட்ஸ் நல்லது என்று கண்டு அறிவோம்! முன்னெல்லாம் , மாவு சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளையே சாப்பிட கூடாது என்று சர்க்கரை நோயாளிகள் அறிவுறுத்தப்பட்டனர்! ஆனால் , இன்றைய கதையோ வேறு! ஓரளவு , மாவு சத்து நிறைந்த ஆகாரங்களை  எடுத்து கொண்டால் தப்பில்லை என்ற நிலையில் இருக்கிறது ! சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index )  என்று ஒன்று இருக்கிறது! அதில் , எந்தெந்த உணவு உட்கொண்டால் , எவ்வளவு வேகமாக , இரத்தத்தில் , சர்க்கரையின் அளவு உயரும் என்ற விவரங்கள் நிறைந்து இருக்கும். அதிலே , ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள், குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடு(Low Glycemic Index ) கொண்டது. இருந்தும் , எல்லா வகையான ஓட்ஸும் நல்லது தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் அளிப்பேன்

தினமும் காலை ஓட்ஸ் உணவை மட்டும்தான் சாப்பிடுகிறீர்கள் எனில் நீங்கள் மற்ற உணவுகளை சாப்பிடத் தவறுகிறீர்கள். இதனால் மற்ற உணவுகளிலிருந்து கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது. எனவே வாரம் 2 முறை காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம். மற்ற நாட்களில் ஊட்டச்சத்து மிக்க காலை உணவுகளை தேர்வு செய்யலாம்.

ஓட்ஸ் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும் என்றாலும் அதிகமாக சாப்பிடுவது தசைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். அதாவது ஓட்ஸில் நார்ச்சத்து நிறைவாக இருப்பதால் உடலில் அதிகமான நார்ச்சத்து சேர்ந்துவிடும். இதனால் உங்களுக்கு பசியே எடுக்காமல் போகும். இதனால் மற்ற ஊட்டச்சத்துக்களை பெர முடியாமல் உடலின் ஆற்றல் குறையும். இதை தொடர்ந்து மற்ற பாதிப்புகளையும் சந்திக்கக் கூடும்.

வயிறு மந்தம் : ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நார்ச்சத்து அதிகமாக இருந்தால் செரிமாண ஆற்றல் குறையும். இதனால் வயிறு மந்தமாக இருப்பதுபோல் தோன்றும். இதனால் எந்த உணவையும் சாப்பிடப் பிடிக்காது. உங்களுக்கு ஏற்கெனவே வாயுத்தொல்லை இருப்பின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

அளவுக்கு அதிகமான சேர்க்கை : உடல் எடையை குறைக்க ஓட்ஸ் சாப்பிடுவோர் ஹெல்தியாக சாப்பிடுகிறேன் என அதோடு நட்ஸ், பழங்கள் , சிரப், என பல வகையான உணவுப் பொருட்களால் அலங்கரித்து சாப்பிடுவார்கள். இதுபோன்று சாப்பிடுவதால் உடல் எடை குறைவதற்கு மாறாக அதிகரித்துவிடும். எனவே உஷாராக இருங்கள்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *