வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள், காரணங்கள்

வைட்டமின்கள் இரண்டு வகை உண்டு. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, இ, கே ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின்கள் – பி1, பி6, பி7, பி 12 பிரிவுகள், வைட்டமின் சி ஆகும்.

இந்த வைட்டமின்கள் எல்லாமே உடலுக்கு அத்தியாவசியமானவை. சில வைட்டமின்களை உடலை தேக்கி வைத்துகொள்ளும். சில வைட்டமின்கள் தேவையான அளவுக்கு பயன்படுத்தி எஞ்சியவற்றை வெளியேற்றிவிடும். அதனால் இதை தினமும் எடுத்துகொள்ள வேண்டும். அதே நேரம் வைட்டமின் அதிகமாகவோ குறையவோ கூடாது. அது உடல் பணிகளை பாதித்துவிட செய்யும். இந்த வைட்டமின் கே குறைபாடு குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வைட்டமின் கே என்பது இரத்தம் உறைவு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கு அத்தியாவசியமானது. வைட்டமின் கே1 அல்லது ஃபைலோகுவினோன் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. வைட்டமின் கே 2 அல்லது மெனக்வினோன் ஆனது விலங்குகளை அடிப்படையாக கொண்ட உணவுகளில் குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருக்களில் உள்ளது. மேலும் குடலும் இந்த வைட்டமின் உருவாக்குகிறது.

வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் கே 2 இரண்டுமே இரத்த உறைவுக்கு உதவும் புரதங்களை உருவாக்குகிறது. இரத்த உறைவு அல்லது உறைதல் அதிக இரத்தப்போக்கு உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ தடுக்கிறது.

வைட்டமின் கே குறைபாடு இருந்தால் உடலில் போதுமான புரதங்களை உற்பத்தி செய்யமுடியாது. இது அதிக ரத்தபோக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். உணவு மற்றும் உடல் உற்பத்தி செய்யும் இந்த வைட்டமின் கே ஆனது சில மருந்துகள் மற்றும் மருத்துவ நிலைமைகளாலும் உடலில் உற்பத்தியை குறைக்க செய்துவிடும் இது பெரியவர்களுக்கு உண்டாகும் குறைபாடு. குழந்தைகளே அதிகமாக வைட்டமின் கே குறைபாட்டை கொண்டிருக்கிறார்கள். இந்த வைட்டமின் கே இரத்தபோக்கு அல்லது வி.கே.டி.பி என்று அழைக்கப்படுகிறது.

​வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள்

வைட்டமின் கே குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் அதிகப்படியான இரத்தப்போக்கு, ஆனால் இது காயம் ஏதேனும் ஏற்படும் போதுதான் கண்டறிய முடியும். இலேசான காயத்துக்கும் சிராய்ப்பு, நகங்களில் இரத்தப்போக்கு அல்லது இரத்தக்கட்டிகள், உணவுப்பாதையில் ஏதாவது ஒரு இடத்தில் இரத்தப்போக்கு இருப்பது, சருமம் வெளிறிபோவது மற்றும் பலவீனம், மலம் கழிக்கும் போது இருண்ட நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வருவது ( குழந்தைகளுக்கு வைட்டமின் கே பற்றாக்குறைக்கான அறிகுறிகளில் இதை தான் முதலில் மருத்துவர்கள் தேடுவார்கள். பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடி பகுதி அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரத்தபோக்கு, தோல் மூக்கு ,ஆண்குறியில் இரத்தபோக்கு போன்றவை எல்லாம் குழந்தைகளுக்கான அறிகுறிகள்)

சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது, எலும்பு பலவீனமாக இருப்பது, சருமத்தில் தடிப்புகள், விரைவான இதயத்துடிப்பு இவையெல்லாம் வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்.

மேற்கண்ட அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த வைட்டமின் கே குறைபாடு எந்த வயதிலும் உண்டாகலாம். பிறந்த குழந்தைக்கு அதிகமாக வைட்டமின் கே குறைபாடு உருவாக வாய்ப்புண்டு.

தாய்ப்பாலில் வைட்டமின் கே குறைவாக இருப்பதால் குழந்தைக்கு பற்றாக்குறை உண்டாகிறது. புதிதாக பிறந்த குழந்தைக்கு வைட்டமின் கே பற்றாக்குறை இருக்கும் போது கல்லீரலில் பாதிப்பு உண்டாகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு, கல்லீரல் நோய், போதுமான அளவு உணவு உட்கொள்ளாதது, நோய்த்தொற்று, இரத்த உறைவு தடுப்புக்கு சிகிச்சையளிக்க கொடுக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் கே குறைபாட்டை உண்டாக்க காரணமாகிறது.

பரிசோதனை சிகிச்சை முறை

வைட்டமின் கே பற்றாக்குறை இருக்கும் போது இது இரத்தக்கசிவு ஏற்படும் நேரம் கணக்கிடப்படுகிறது. ரத்த உறைவு சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு வைட்டமின் கே குறைபாட்டு விளைவை அறிய புரோத்ராம்பின் நேரம், சோதனை, இரத்தப்போக்கு நேரம், உறைவு நேரம் போன்ற சோதனைகளை செய்யப்படுகிறது. இரத்தம் உறைவதற்கு 11 முதல் 13. 5 வினாடிகள் ஆகும். இதை விட அதிக நேரம் எடுத்தால் அது வைட்டமின் கே குறைபாட்டை குறிக்கலாம்.

மருந்துகள் ஊசி மூலமாக வைட்டமின் கே குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உணவு வழியாக என்னும் போது கீரை, பச்சை இலை காய்கறிகள், முட்டைகோஸ், ப்ரக்கோலி என வைட்டமின் கே நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் கே இருக்கும் உணவுகள்

தினசரி தேவையான அளவில் ஆண்களுக்கு 120 மைக்ரோகிராம், பெண்களுக்கு 90 எம்.சி. அளவும் தேவை கீரை, காலே, ப்ரக்கோலி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள், தாவர எண்ணெய்கள், அவுரி நெல்லி மற்றும் அத்தி பழங்கள், சீஸ், சுண்டல், சோயாபீன்ஸ், பச்சை தேயிலை தேநீர் போன்றவை எடுத்துகொள்ளலாம்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *