வெஜிடபிள் கோதுமை ரவை சாலட்

Visits of Current Page:484
GlobalTotal: 311244

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையை கிச்சடி, உப்புமா என்று சாப்பிடாமல் இப்படி காய்கறிகள் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை  ரவை – கால் கப்வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் – தலா ஒன்று
ப்ரோக்கோலி – பாதியளவு
தக்காளி – 1
ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 3 பல்
எலுமிச்சைச் சாறு –  2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு – 9
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப     

செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

ப்ரோக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

கோதுமை  ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பூண்டு, ப்ரோக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை).

வேகவைத்த  கோதுமை  ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *