வாட்ஸ்அப் தளத்தில் வெளியான வாய்ஸ் மெசேஜ் ப்ரிவியூ

Visits of Current Page:929
GlobalTotal: 263138

வாய்ஸ் மெசேஜ் அப்டேட் வாட்ஸ்அப் தளம் பயனர்களின் தேவை அறிந்து பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களுக்கு ப்ரிவியூ அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் தளம் அதன் வாய்ஸ் மெசேஜ் அம்சத்தை படிப்படியாக மேம்படுத்தி வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் தளத்தின் வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாய்ஸ் செய்தியில் பின்னணி வேகத்தை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்அப் அதன் வாய்ஸ் மெசேஜ் தளத்தில் மற்றொரு மேம்பட்ட அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

voice message preview Feature அம்சம்

தற்போது வாட்ஸ்அப் அதன் தளத்திற்கு மற்றொரு புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் தளத்தில் வாய்ஸ் மெசேஜ்களை தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பும் முன் அவற்றை ப்ரிவ்யூ செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சமானது voice message preview Feature என்று அழைக்கப்படுகிறது. வாட்ஸ்அப் தளத்தில் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட்டை தொடர்புகளுக்கு அனுப்பும் முன் அவற்றை ஒருமுறை கேட்க அனுமதிக்கும். தொடர்புகளுக்கு அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களில் இந்த மேம்பாடு மிக உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

வாய்ஸ் மெசேஜ் அப்டேட்

பிழை இருந்தால் உடனே டெலிட் செய்யலாம் வாட்ஸ்அப் தளத்தில் ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அவர்களுக்கு அனுப்பிய பிறகே அதை கேட்க முடியும், அதில் ஏதாவது பிழை இருந்தால் உடனே டெலிட் செய்து விட்டு மீண்டும் அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்துவிட்டு அதை அனுப்புவதற்கு முன்பாகவே கேட்கலாம். அது சரியில்லை என்றால் அனுப்பாமலேயே நீக்கிவிட்டு அதை மீண்டும் பதிவு செய்யலாம். இதன் மூலம் ஒருவருக்கு பிழையான வாய்ஸ் மெசேஜ் அனுப்பதை தடுக்க முடியும். இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த அம்சமானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் மற்றும் டெஸ்க்டாப்கள் உள்ளிட்ட பல பிளாட்ஃபார்களில் வெளியிடப்பட்டுள்ளது.

எப்படி ஆக்டிவேட் செய்வது

இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று குறித்து பார்க்கலாம். மொபைலில் இந்த அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ்அப் சேட்டிங் பயன்பாட்டுக்கு சென்று அதில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அழுத்தும் மைக்ரோஃபோன் சிம்பலை அழுத்தி பதிவு செய்ய வேண்டும். அதை ப்ரிவியூ கேட்க விரும்பினால் நீங்கள் அதை மேலே ஸ்லைடு செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது நீங்கள் பதிவு செய்த வாய்ஸ் மெசேஜை கேட்கலாம். பின் அதில் இடதுபக்கம் ட்ராஷ் பாக்ஸ் மற்றும் வலது பக்கம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பு என்ற விருப்பத் தேர்வு காண்பிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட வாய்ஸ் மெசேஜை கேட்பதற்கு இதன் நடுவில் இருக்கும் சிவப்பு நிற பட்டன் தேர்வை அழுத்தினால் வாய்ஸ் மெசேஜை ப்ளே செய்வதற்கான ஆப்ஷன் கேட்கப்படும். இதில் மெசேஜ் டெலிட் செய்ய வேண்டும் என்றால் ட்ராஷ் பாக்ஸ் என்ற விருப்பத்தை தேர்வு செய்யலாம். வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் என்றால் அனுப்பு என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

 voice message preview Feature அம்சம்

புதிய அப்டேட் ஃபாஸ்ட் பிளேபேக்’ என்ற புதிய அம்சத்தைத் தனது புதிய அப்டேட் மூலம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம், உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் வரும் ஆடியோ மெசேஜ்கள் மற்றும் பைல்களை இரண்டு பின்னணி வேகத்தில் இயக்க அனுமதிக்கிறது. நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை வேகமாக கேட்டு முடிப்பதற்கு இந்த அம்சம் வழிவகுத்துள்ளது. இந்த அம்சமானது நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை எளிதாகக் கேட்க உங்களை அனுமதிக்கின்றன. மேலும், நீண்ட செய்திகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்கும், பெரிய வாய்ஸ் மெசேஜ்களுக்கென்று நாம் செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கும் இந்த ஃபாஸ்ட் பிளேபேக் அம்சத்தைப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ்அப் தெரிவித்தது. இந்த அம்சத்தின் படி வாய்ஸ் மெசேஜ்களை வேகப்படுத்துவதன் மூலம் நேரம் மிச்சமாகிறது.

ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம்

ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம்

உண்மையைச் சொல்லப்போனால், நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை பெரும்பாலும் வாட்ஸ்அப் பயனர்கள் யாரும் முழுமையாகக் கேட்டு முடிப்பதில்லை. இதை எளிமையாக்கும் நோக்கத்தில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சம் அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம் தற்பொழுது அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கென்று வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் அப்டேட் மூலம் கிடைக்கிறது.

Leave a Reply