எமது யா/கம்பர்மலை வித்தியாலய அன்னையானவள்,கொம்மந்தறை, வல்வெட்டித்துறையிலே 22.05.1997 அன்று தன் கால்களில் பொற்சிலம்பு கட்டி நர்த்தனம் ஆடத் தொடங்கினாள்.ஆம் அன்று அன்னையின் விழுதுகள் “பூபாள ராகங்கள்” என்னும் பெயரிலே நிதி சேகரிப்புக் கலை நிகழ்வினை நடாத்தியிருந்தார்கள்.
முதல் முதலாக, வடமராட்சி மண்ணிலே பழைய மாணவர் சங்கங்களுக்கும் , பாடசாலைகளுக்கும் எடுத்துக்காட்டாக அன்றைய சூழலில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
அன்றைய சூழலில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வு ஊர் அடங்கு சட்டம் முழுமையாக இரவிலே தளர்த்தப்படாமல் இருந்த காலப் பகுதியில் நடாத்தப்பட்டது விதந்து கூறத்தக்கது ஆகும்.
நிகழ்வு க்கு வந்தவர்கள் வெளியே செல்லக்கூடாது என்ற அடிப்படையில் மிகச்சிறப்பாக அன்னையின் வழிகோலிகளால் சிறப்பாக நடாத்தப்பட்டது
இது நிகழ்ந்தது 25 வருடங்களுக்கு முன்பு..இப்பொழுது நடந்தது போல் பசுமையான நினைவலைகள். ஆம் வெள்ளிவிழாவைக் கண்ட எமது பூபாளராகங்கள் நிகழ்வு அந்த நிகழ்வினை மீண்டும் நினைவூட்டுமுகமாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை (22.05.2022)அன்று எமது பூபாளராகங்கள் செயல்பாட்டு அமைப்பாளர்களால் நினைவு கூரப்பட்டது.
பூபாளராகங்கள் வெள்ளிவிழா நிகழ்வு-2022 மே 22 ஆம் நாள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டது.இது மேல்வரும் கட்டங்களாய் ஒழுங்கமைக்கப்பட்டது.
1)அதிபர்,பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம்,பாடசாலை ஆசிரியர் கழகம், பாடசாலை மாணவர்கள் மற்றும் கலை நிகழ்வு நடைபெற்ற போது கடமையாற்றிய பாடசாலை சமூகம் மற்றும் பூபாளராகங்கள் அமைப்பாளர்கள் முதலில் ஒருங்கிணைக்கப்பட்டு விழா திட்டமிடப்பட்டது.
பூபாளராகங்கள் வெள்ளிவிழா நிகழ்வு 22 மே2022 அன்று திட்டமிட்டபடி , சரஸ்வதி சிலை முன்றலில், சமய நிகழ்வுடன் ஆரம்ப மானது.
முதலில் பி.ப 4.00 மணி அளவில், எமது அன்னை மனோன்மணி அம்மன் ஆலயத்திலே சிறப்பு பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இந்நிகழ்விலே பூபாளராகங்கள் அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
சமய நிகழ்வைத் தொடர்ந்து,வெள்ளி விழா ஆரம்பமானது. இதனை பூபாளராகங்கள் பிரதம் அமைப்பாளர்களில் ஒருவரும்,அப்போதைய செயலாளர் நாயகமும் ஆகிய இரா .அகிலன் தொகுத்து வழங்கினார்
அடுத்து மங்கல விளக்கு சுடரேற்றப்பட்டது. இதனை முன்னை நாள் அதிபர் தேவராஜா அவர்களும், அமைப்பாளர்களில் ஒரு வரும் ஆகிய கைலாஜினி அவர்களும் ஏற்றினார்கள்
இந்நிகழ்வு முதலில், பாடசாலையின் பழைய மாணவரும், மனோன்மணி அம்பாள் ஆலய பிரமகுருவும்,ஆகிய பாலகிருஸ்ணக்குருக்கள் அவர்களின் ஆசி உரையுடனும், இறையாசியுடனும் ஆரம்பமானது.
அடுத்து மரநடுகைக் கீதம் ,எமது பாடசாலையின் முன்னாள் சங்கீத ஆசிரியரும்,பூபாளராக கலைஞரும்,ஆகிய ரங்கநாயகி ஆசிரியரால் பாடப்பட்டது.தள்ளாத வயதிலும் ,தளர் நடையுடன் ,கரம் பற்றி வந்தபோதும் எம் அன்னையாம் வித்தியாலயத்தின் மீது அவர்கொண்ட பற்று வியக்கத்தக்கது.
அடுத்து மரம் நாட்டும் நிகழ்வு ஆரம்பமானது.
இதனை பூபாள ராகங்கள் அமைப்பாளர்களாகிய செந்தூரன் ,ரமேஸ் மற்றும் சகிதன் ஒழுங்கமைத்தார்கள்
தொடர்ந்து பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க , பூபாள ராகங்கள் அமைப்புக்குழுவால் அமைத்து வழங்கப்படவுள்ள. இயற்கைப்பசளை உற்பத்தி தொட்டிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வை எமது பழைய மாணவனும் சிற்ப வேந்தனுமாகிய மனோகரன் முன்னெடுத்தார்.இவ் அடிக்கல்லை பாடசாலை அதிபர், பழைய அதிபர், பூபாளராகங்கள் அமைப்புக் குழுவினர் மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து, பூபாளராகங்கள் நிகழ்வின் நிழல்கள் நினைவு கூரப்பட்டது….
இதில்,
நிகழ்வின் களமுனைஞர்களாய் தொழில்பட்டு அமரத்துவம் அடைந்தவர்கள் நினைவு கூரப்பட்டார்கள்.இதனைத் தொடர்ந்து பூபாள ராகங்கள் நினைவு நிதியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று ரமேஸ் முன்மொழிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இந்நிதியம் பாடசாலை அபிவிருத்திக்கு வேண்டிய உதவிகளை வழங்கும்வருகை தந்திருந்த ஐ.பீ.சி யின் நேர்காணல் இடம்பெற்றது.இறுதியாக பாடசாலையின் பழைய மாணவர் சங்க பிரதம அமைப்பாளர்களில் ஒருவரும்,பூபாள ராகங்களின் பிரதம அமைப்பாளர்களில் ஒருவரும்,தொழில் வழங்கல், தொழில் வழிகாட்டல்,தொழில் ஊக்குவிப்பு மற்றும் தொழில் துறைகளுக்கான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளரான இரா.அகிலனின் நினைவு கூரலுடன் நிறைவு பெற்றது
இவ் விழாவின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பு
தகவல்: கலாநிதி. இராஜசுந்தரம் அகிலன்.(பணிப்பாளர் ,கல்வி அமைச்சு)