மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 29 ] T .சௌந்தர்

பெற்றதும் கொடுத்ததும்.

இதுவரை மெல்லிசைமன்னர்கள் ஹிந்தி இசையின் தமக்குப் பிடித்த ஒலிக்கூறுகளை எல்லாம் தமது இசைகளில் சாதாரண ரசிகர்கள் யாரும் இனம் கண்டுபிடிக்க முடியாத வகையில்  இழைத்து கொடுத்தற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்த்தோம். ஹிந்திப்பாடல்கள் மட்டுமல்ல தென்னிந்திய திரைப்படங்களின் பாடல்களிலும் அவர்கள் இசை அனுபவங்களையும் பெற்றார்கள்.

மெல்லிசைமன்னர்களின் சமகால இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றின் சாயல்கள் இருப்பதைக் காண்கிறோம். ஆண்டு வரிசையில் அவை மெல்லிசைமன்னர்களுக்கு முன் வந்த பாடல்கள் என்பதை வைத்து நாம் இதைக் காண்கிறோம். 

பெற்றது.

வாவேக மன மோகனா    – சாகு மகளு 1963  – பி.லீலா   – இசை : டி.ஜி.லிங்கப்பா

மாதவிப் பொன் மயிலாள் – இருமலர்கள்  1967  –  டி.எம்.எஸ்  – விஸ்வநாதன்

அகலே   நீலஹாசம்    – அத்தியதே கண்மணி 1969  – ஜேசுதாஸ் + ஜானகி   – இசை பாபுராஜ் 

மலரே குறிஞ்சி மலரே – டாகடர் சிவா  1975  – ஜேசுதாஸ் + ஜானகி   – இசை:விஸ்வநாதன்.

குரு நாத துணை செய்யும்   –  Njanappana Poonthanam   – பி.லீலா   – 1600 நூற்றாண்டு  பக்திப்பாடல்

கண்ணன்  வந்தான் எங்கள்  – ராமு  1966  –  டி.எம்.எஸ் + சீர்காழி  – விஸ்வநாதன்

நாம் சாதாரணமாக கேட்கும் ஒலிகளை ஒரு நல்ல கலைஞன் அதை எடுத்தாளும் போது உயர்வாக நிலைபெற்றுவிடுகின்றது. அதனூடே எழும் உணர்ச்சியலை நம்மை புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறது இந்த வகையிலேயே மெல்லிசைமன்னர்கள் பிற பாடல்களிருக்கும் இசைக்கூறுகளை உணர்வுத் திறனை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தினர் 

சினிமா இசை என்பது பெரும்பான்மையான மக்களின் ரசனைக்குரியது ; அவர்களால் ரசிக்கப்படுகின்ற , மற்றெந்த இசையையும்விட .கட்டுப்பாடற்ற விரிந்த களத்தைக் கொண்டுள்ள அதேவேளை  இந்த இசை மக்களின் உளப்பாங்கையும் , விருப்பங்களையும் வெளிப்படுத்தும் இசையாகும்.

நதி மூலமும் , ரிஷி மூலமும் காண்பது கடினம் என்பர். ரிஷிகள் உயர்வானவர்கள் என்ற சிந்தனையின் அடிப்படையில் அவர்களின் பூர்வீகம் மற்றும் அவர்கள் யாருக்குப் பிறந்தார்கள் என்பதெல்லாம்  பார்க்கக்  கூடாது என்ற கருத்து நிலவுகிறது. அறிவும் ,நல்ல சிந்தனையும் எங்கிருந்தும் வரலாம்..

கண்டுபிடிக்க முடியாத பல நதிகளின் மூலங்களை எல்லாம்  ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தேடுதல்களால் கண்டுபிடிதித்திருக்கிறார்கள். எல்லைகள் வகுக்கப்பாடாத காலத்திலிருந்து நதிகள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. மனிதனால் வகுக்கப்பட்ட எல்லைகள் ஊடாக அவை இன்று ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் அந்த நதிகளின் ஊற்று மூலங்கள் வெவேறு பகுதிகளில்  கண்காணாத இடங்களில் உருவாகுகின்றன.இதற்கு உதாரணங்கள் பலவற்றை உலகெங்கும் காட்ட முடியும். ஓரிடத்தில் ஊறும்  நீர் பெருகி ஓடும் பகுதிகள் அவற்றை உரிமை கொண்டாடுவதையும் நாம் காண்கின்றோம்.

நதிமூலம் , ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்ற கருத்தை மீறி மனிதனின் அறியும் ஆர்வம் அவற்றின் மூலங்களைக் கண்டடைந்துள்ளது. இந்தத்தேடுதல் இசையிலும் உண்டு.சாதாரண ஒரு இசைரசிகன் தான் கேட்கும் ஒரு பாடலின் சாயல் வேறு ஒருபாடலில் இருப்பதை உணர்கிறான். அதை நுட்பமாக சிந்தித்து ஆராயும் ரசிகன்  அதன் சூட்சுங்களை அறியும்ஆவல் படைத்தவனாகிறான்.

கலைஞர்களிடம் ஒரு சிறு பொறியாக மூளும் அருட்டுணர்வு படைப்புணர்ச்சியை உண்டு பண்ணிவிடுகிறது. அக்கினிக்குஞ்சு என்று பாரதியால் வர்ணிக்கப்பட்ட சிறு நெருப்பு பொறி காட்டுத்தீயெயை உருவாக்குவது போல , சிறு துளி சேர்ந்து வெள்ளமாகி , பெருநதியாக மறுவதுபோல கலைஞர்களின் உள்ளத்திலும் சிறு பொறிகளின் தெறிப்புகழ்படைப்புகளுக்கு ஆதாரமாகின்றன.

மூன்று தசாப்தங்களாக தங்கள் இசையால் மக்களைக் கட்டி வைத்த மெல்லிசைமன்னர்களின் இசையும் ,அவற்றின் மூலங்களையும் , ஓட்டங்களை காண்பது எளிதான காரியமுமல்ல. இசையே வாழ்வாக வாழ்ந்த மெல்லிசைமன்னரின் இசை , அவரது ரசனை , படைப்பாற்றல் உந்துதல் போன்றவை குறித்து மிகக்குறைந்த அளவிலேயே அவரது உரையாடல்களில் அவர் சொல்லியிருக்கின்றார் என்பதால் இசைத்தாகம் மிக்க அவரது படைப்புகளிலேயே நாம் அவற்றை தேட வேண்டியுள்ளது.

படைப்பாற்றலில் ஓங்கியிருந்த அவரது வேகமும் , ஆற்றலும் அவர் பெற்ற மூலப்பொறிகளால் எங்கனம் வளம் பெற்றன என்பதையும் அறிய முடியும். அவரது படைப்பிலேயே நாம் அவரது ரசனையையும் தரிசிக்கின்றோம். அவர் காலத்தில் வாழ்ந்த அவரே ஆகர்ஷித்த இசையமைப்பாளர் வகுத்த இசைமரபின் உள்ளோட்டத்தில் சுழன்றது மட்டுமல்ல அதிலிருந்த பல வடிவ சோதனைகளும்  அவரது படைப்பு ரகசியம்  ஆகும். குறிப்பாக ஹிந்தி திரையிசையில் மாபெரும் எழுச்சியை தந்த நவுசாத் அலியின் இசை மீது அளவற்ற பிரியமும் , அவரை தனது வழிகாட்டியாகவும் கொண்டவர் என்பதை மெல்லிசைமன்னர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கின்றார். தனது தகமை , திறமை எல்லாவற்றிற்கும் நவுசாத்தின் இசையே காரணம் எனவும் கூறியிருக்கின்றார்.

ஆனாலும் அவரது படைப்பின் வீச்சு நவுசாத்தை தாண்டியும் எல்லை கடந்து பலதரப்பட்டதாக  இருப்பதையும் நாம் காண்கிறோம். சென்ற பகுதியில் ஹிந்தி திரையிசையிலிருந்து நல்ல இசைக்கூறுகளையெல்லாம் தழுவியும் ,மருவியும் இசைவுபட வெளிப்படுத்திய பாங்கு அவரது கலாமேன்மையைக் காட்டுவனவாகும்.

தமிழ் திரையில் ஹிந்தியில் நிழல்படாத இசையமைப்பாளர்கள் இல்லை என்று சொல்லலாம். 1940கள் தொடங்கி 1980கள் வரை அதன்பாதிப்பை நாம்  காணமுடியும்.நாம் பெரிதாக நினைக்கும் பல பழைய இசையமைப்பாளர்களும் ஹிந்திப்பாடல்களை அப்படியே தழுவி இசையமைத்திருக்கிறார்கள். அன்று முன்னணியிலிருந்த ஜி.ராமநாதன்  தொடங்கி புதுமை முயற்சிகளை   மேற்கொண்ட சி.ஆர்.சுப்பராமன் என அனைவரும் தங்கள் படைப்பூக்கத்தின் தூண்டு   புள்ளியாக ஹிந்தி பாடல்களை பயன்படுத்தினர்.

அந்தக்காலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் இயங்கிய டி.ஆர்.சுந்தரம் நேரடியாக ஹிந்திப்பாடல்களை பிரதியெடுக்கும் படி இசையமைப்பாளர்களிடம் வேண்டிக் கொள்வாராம்.ஆனாலும் ” நம்மால் சொந்தமாகவும் இசையமைக்க முடியும் ” என்று ஜி .ராமநாதன் விலகிச்  சென்றார்.

ஆனாலும் ஹிந்திப்பாடல்களை ஆங்காங்கே பிரதி எடுக்கும் வேலை நடந்து கொண்டே தான் இருந்தது. 1970  கள் வரை  மாடர்ன்தியேட்டர்ஸ்  இசையமைப்பாளர் வேதா வை அமர்த்தி பல ஹிந்திப்பாடல்களை பிரதியெடுக்க  வைத்தது. குறிப்பாக ஜெய்சங்கர்  நடித்த படங்களில் அவை  வெளிவந்தன. ” நான் மலரோடு தனியாக ” – ” இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது ” போன்ற இனிய பாடல்களும் , யார் நீ படத்தில் முழுமையாக முழுப்பாடல்களும் பிரதி செய்யப்பட்டு வெளிவந்தன.

பிரதி எடுப்பது ,பிறரது இசையைக் கையாள்வது பற்றி பிரபலபாடகர் ஜேசுதாஸ் பின்வருமாறு கூறுகிறார்

நான் பலஇசையமைப்பாளர்களுடன் பழகியிருக்கிறேன். அவர்கள் சொன்னவைகளை மனதில் வைத்து சொல்கிறேன். ஒரு பாடல்  என்பது முதலில் அவரது சொந்தமாக இருக்க வேண்டும். ஆனால் அதை கேட்பவர்கள் ” இல்லை இது பத்து வருடத்திற்கு முன்னரேயே வேறு ஒரு இடத்தில் வந்திருக்கிறது ” என்று யாரவது கூறினால் அது அவருடையது இல்லை  என்றாகி விடுகிறது. அந்த மாதிரி யாரும் சொல்லக்கூடாது . ஆனால் எல்லாம் ஒரே பாணியில் முழுமையாக , சுத்தமாக இருக்க முடியாது. இருக்கிறது ஏழு சுரங்கள் தான் : இருக்கிறதிலே செய்து கொண்டிருக்கின்றார்கள்.அதிலே ஏதும் வரலாம் “

சில வருடங்களுக்கு முன்னர்  சிங்கப்பூரில் கண்ணதாசன் நினைவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஸ்வநாதன் கண்ணதாசனின் மகள் விசாலி எழுதிய பாடலை ரசிகர்களுக்காக தான் இசையமைக்கும் முறையைக் காண்பித்த போது எங்கோ உருவான மெட்டு மெல்ல மாறி ” எனக்கொரு காதலி இருக்கின்றாள் ” என்ற பாடல் மெட்டுக்கு  வந்து விட்டது. உடனே அதை உணர்ந்த விஸ்வநாதன் அதை மீண்டும் பாடி புதிய டியூனுக்கு மடைமாற்றிக் காட்டினார்.

ஜேசுதாஸ் கூறியது போல “இருப்பது ஏழு சுரங்கள்” , அதற்குள் எல்லாவிதமான இசையும் அடக்குவதால் இசையமைப்பாளர்கள் தாம் கேட்டு , ரசித்து ,இன்புற்ற இசையின் தாக்கம் அவர்களையறியாமலேயே வந்து விடுவதுண்டு. அது குறித்து விஸ்வநாதனே மிக அருமையாக பின்வருமாறு கூறுகிறார்/

” இந்த இசையமைப்பு ,பாட்டெழுதுவது என்கிற தொழிலிலே நமக்குப் பிடிச்ச விசயங்கள் எங்கோ நமக்கு அறியாமல் ,ஒளிஞ்சு நிற்கும். வேறுயாராவது கம்போசர்களைக் கேட்டாக் கூட அந்தச் சாயல் வந்திடும் , இல்லை அந்தச் சாயல் அறியாமல் வந்திடும். அதனாலே அதனைத் திருடினேன் என்று சொல்லக் கூடாது. பாக்கியுள்ளவர்கள் திருடினேன் என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒழிச்சு வைக்க வேணும்.அதனை ஓபன் ஆகத் திருடினேன் என்றளவுக்கு வைச்சுக்கக் கூடாது. நானும் காப்பி அடிச்சிருக்கேன் .என்னைப் பார்த்து சிலர் காப்பி அடிக்கிறதா சொல்லிக்கிறாங்க! இருக்கலாம் , But அதை ஒழிச்சு வைக்கணும்.”

இசையில் தாம் அனுபவித்த பிற இசைகளின் சில இனிய இசைக்கூறுகளை , இசை ஒலிக்கூறுகளை எடுத்துக் கொண்டு அவற்றை ஆங்காங்கே இசை அடுக்குகளில்  சேர்ப்பதும் , இனிய ஒலிநயங்களை சேர்ப்பதும் அதன் இயல்பிலே நிறைந்து ஒன்றுதலும் சற்றே விலகி அதன்  மென் நளினங்களைக் காட்டி செல்வதும் எங்கோ தொடங்கி இனிமையை நீக்கமறக் கொடுக்கும் உத்திகளை உலகெங்கும் காண்கிறோம்.

மேலைத்தேய செவ்வியலிசையில் இந்த விதமாக இசையின் நுட்பங்களையெல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு பரீட்சாத்தமாக செய்து பார்த்தவர்கள் மேலைத்தேயஇசைக்கலைஞர்கள். அவர்களில் ஜே.எஸ்.பாக் , மொசார்ட் , ஹைடன் போன்றவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

மேலைத்தேய செவ்வியல் இசையின் இளமை குன்றாத இனிமைக்கு எடுத்துக்காட்டாடாக விளங்கியவர் மொஸாட் என்ற இசைக்கலைஞன். இவரது  சமகாலத்தவரும், வயதில் மூத்தவருமான.ஹைடனின் பல படைப்புகளில் மொஸாட்டின் பாதிப்பு அதிகம் இருப்பதை நாம் காணலாம். அதனை அவர்கள் Musical variations  என்று அழைத்தனர்.

இயற்கையில் தாம் காணும் நல்லவற்றை மனிதன் தன்வயப்படுத்தி வளர்ந்த நீண்ட பழக்க தோஷம் அழகியல் கலைவடிவங்களிலும் ஆழ தடம் பதித்துள்ளது. கால வளர்ச்சிக்கு ஏற்ப கலைவடிவங்களிலும் அவை மாற்றம் பெற்று வளர்ந்திருக்கிறது. ஒரு மூலத்திலிருந்து கிடைக்கும் அம்சங்களை  ஒவ்வொரு கலைஞர்களும் தங்களுக்குரிய வகையில் பயன்படுத்தி மாறுபாடான பலவித பரிமாணங்களை எட்டுவதும் , அதன் விளைவாய் மாற்று வடிவங்களின் மீதான நுண்பார்வை பின் அதன் விளைவாய்  அதை ஒப்பீடு செய்யும் ஒப்பியல் என்கிற ஆராய்ச்சி மனப்பாங்கையும் வளர்க்கிறது.

பிறரது படைப்புகளைக் கையாள்வது அவற்றை விரிவாக அழகு சேர்த்தெடுத்து செல்வது அல்லது இட்டுக்கட்டுவது மற்றும்  பல முனைகளில் ஊடாடுவது , பரிமாற்ற உள்வினையாற்றுவது என படைப்பின் விஸ்தீரணங்களைக் காட்ட முயலும் போது  அவை மீள , மீள பயன்படுவதால் அவை  சலிப்புக்கும் விமர்சனங்களுக்கும்  இலகுவில் உள்ளாக்கப்படுகின்றன. ஆனாலும் பொதுவாக கலைகளில் இவ்விதமான ஒரு சில முக்கிய கூறுகள் மீள மீள பயன்படுத்துவதும் மரபாக இருந்து வந்துள்ளதை காண முடியும். அவை கேலிக்கும் , விமர்சனங்களுக்கும் உள்ளானதை நாடக வரலாற்றிலும் காண்கிறோம்  

ஆங்கிலேய  காலனித்துவவாதிகளால்  சேக்ஸ்பியரின் நாடகங்கள் உலகெங்கும் பரப்பபட்டன. தன்னிகரில்லாத மேதை என்று நாடக உலகில் பேசப்பட்ட சேக்ஸ்பியரின் நாடகங்களில் பல ஏற்கனவே பயன்படுத்தப்படட கதைகளிலிருந்து  எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

கவிஞர் ஜான் கீட்ஸ்

ஷேக்ஸ்பியரை தங்களது ஆதர்சக்கவிஞன் என அவருக்குப்பின்வந்த பலர்  கூறிக்கொண்டனர். அவர்களில் ரொமாண்டிக் கவிஞர் ஜான் கீட்ஸ் (1795-1821) ஷேக்ஸ்பியரால் மிகவும் கவரப் பெற்றார், தனது மேசைக்கருகே சேக்ஸ்பியரின்  மார்பளவு சிலை ஒன்றை அருகில் வைத்திருந்தார்.அதன் மூலம்  ஷேக்ஸ்பியர் தனது படைப்பாற்றலைத் தூண்டுவார் என்று ஜான் கீட்ஸ் நம்பினார் . கீட்ஸின் கவிதைகளில்  ஷேக்ஸ்பியரின் சாயல் இருப்பதாகவும் மற்றும் ஷேக்ஸ்பியரின் மனத்தகத் தோற்றங்கள் நிறைந்தவை என்றும் கூறப்படுகிறது.

ஷேக்ஸ்பியரை வணங்கியவர்களை ”  Bardolatry ” என்று கேலி செய்தார்  அறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா [1865-1950 ] . ஆனாலும் ஷேக்ஸ்பியரை ரகசியமாக பாராட்டினார் என்றும்  தனது நெருங்கிய நண்பர்களிடம் அடிக்கடி  சேக்ஸ்பியரின்  மொழியறிவு குறித்த வியந்து பாராட்டியுமிருக்கின்றார் எனவும் அறியக்கிடைக்கின்றது.

இது போன்ற கருத்துக்கள் இருந்தாலும்  கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர்  ஷேக்ஸ்பியரை முன்மாதிரியாகக் கொண்டது மட்டுமல்ல , பல நாவலாசிரியர்களும் தங்கள் படைப்புகளுக்கு சேக்ஸ்பியரின் தலைப்புகளை பயன்படுத்தினர்.

ஆங்கில இலக்கியத்தின் கொடுமுடி என புகழப்பட்ட ஷேக்ஸ்பியரின் படைப்புகளும்  விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. ஆங்கில நாடக வரலாற்றில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்ததாக அவரது காலத்தில் பெயர் எடுத்தவர் பென் ஜோன்சன்

சேக்ஸ்பியரின்  சமகாலத்தவரான பென் ஜோன்சன் நாடக்கலைஞராவர். ஷேக்ஸ்பியரை விட ஒன்பது வயது இளையவர். சேக்ஸ்பியரின்  வாரிசு என அறியப்பட்டவர். பின்னாளில் அவர் ஷேக்ஸ்பியர் பற்றி பல விமர்சனங்ககளை வைத்தார். ஷேக்ஸ்பியர் மீது முதன்முதலில் கடுமையான விமர்சனத்தை வைத்தவரும்  பென் ஜோன்சனே !  அதில் முதன்மையானது ஷேக்ஸ்பியரிடம் கலை இல்லை என்பதாகும்.

பென் ஜோன்சன்

பென் ஜோன்சன் [ Ben Jonson 1572  -1637 ] ,சேக்ஸ்பியர் குறித்து சொன்ன கருத்து மிகக்கடுமையானவையாக இருந்தன  . சேக்ஸ்பியரின் படைப்புகள் எல்லாம் “பாசிபிடித்தவை ” [  Mouldy ] என்றார். அவரது படைப்புகள் எல்லாம் அவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியவைமட்டுமல்ல. சேக்ஸ்பியரின் படைப்புகளில் The Tempest நாடகம் ஒன்று மட்டுமே பிற வடிவங்களிலிருந்து பெற்றது என்பதற்கான அடையாளம் காணப்படவில்லை என்றார் பென் ஜோன்சன். அதிகம் திருடியவர் என்ற திருட்டுப்பட்டம் பெற்றவர் சேக்ஸ்பியர்.

இது ஷேக்ஸ்பியர் பற்றிய கடுமையான ஓர் விமர்சனம் என்றாலும் சேக்ஸ்பியரின் தனித்தன்மையும் , அவரது படைப்பாற்றலின் திறனுக்கு அடிப்படைக்காரணங்களாக அவரது வாசிப்பு , அதனை உள்வாங்கும்  சக்தி ,அதனூடே எழும் கற்பனைசக்தி, அவற்றை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் போன்றவை ஏனைய கவிஞர்களான ஸ்பென்சர், மில்டன், பர்ன்ஸ், கீட்ஸ் மற்றும் டென்னிசன் போன்றோரைவிட அதிகமாக இருந்தது என்பர்.

மத்திய காலத்தின் தலை சிறந்த  ஆங்கிலேயக் கவிஞரும் , எழுத்தாளரும் ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனவும் போற்றப்படுகின்ற Geoffery Chaucer [ 1340 – 1400  ] என்பவர்  சேக்ஸ்பியரின் பேரபிமானத்திற்குரியவராக திகழ்ந்தார். The Canterbury Tales  என்ற படைப்பு       Geoffery Chaucer ன்  புகழுக்கு  எடுத்துக்காட்டாகும்.இவரின் கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களை அமைத்தார்.

கிரேக்க தத்துவவாதியும் , சுயசரிதை எழுத்தாளருமான  Plutarch  [ கி.பி.46 – 120 ]  என்பவர் எழுதிய  Parallel Lives என்ற ஆக்கத்தின் மொழிபெயர்ப்பிலிருந்து தனது Antony and Cleopatra, Julius Caesar, Coriolanus, Timon of Athens போன்ற நாடகங்களுக்கான விஷயங்களை எடுத்தாண்டார்.

பலரது  ஆக்கங்களை அவர் இரவல் வாங்கினாலும் அதை படைப்பூக்கத்துடன் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதுவே சேக்ஸ்பியரின் பலம் என்று அவரது படைப்புகளை ரசிப்பவர்கள் கருதுகின்றார்கள்.

ஆனாலும் இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி உலக இலக்கியத்தில் பெருங்கலைஞர்களுக்கு சமதையாக பேசப்படுபவர் சேக்ஸ்பியர்.

ஷேக்ஸ்பியர் பயன்படுத்தியது போலவே பண்டையகதைகள்  மீள , மீள  சொல்லப்பட்டு வருகின்றன தென்கிழக்கு ஆசியாவில் மகாபாரதம் , ராமாயணம் போன்ற கதைகள் பல்வேறு சமூகங்களிலும் வெவ்வேறு விதமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. வால்மீகியின் உள்ளடகத்தை எடுத்துக் கொண்ட  கம்பன் தனது கவித்திறத்தால்  அதை கம்பராமாயணம் ஆக்கியது போல!

 “ வால்மீகரின்  சீதைப்படிமம் கம்பனாலும் , எழுத்தச்சனாலும் , துளசிதாசராலும் , குமாரனாசானாலும் மாற்றப்பட்டுள்ளது.ஒவ்வொரு சீதைப்படிமத்திலும் காலத்தின் சிந்தனையும் , கவிஞரின் அகவைய உள்ளடக்கத்தின் முத்திரையையும் காண்கிறோம் ” என்பார் பேராசிரியர்   வானமாமலை.[ இலக்கியத்தில் உருவமும் , உள்ளடக்கமும் – பக்கம் 17

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக அரங்கம் பார்சிநாடகத்தை உள்வாங்கி தமிழ் மக்கள் இசையையும்  இணைத்த வண்ணம் வளர்ந்தது. சங்கரதாஸ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல சம்பந்தமுதலியாரின் நாடகங்கள் சேக்ஸ்பியரின்நாடக மொழி பெயர்ப்புகளுடன் வசனங்களையும் ,தமிழர் பாரம்பரியங்களையும் இணைத்து உருவாகின.

பழைய இலக்கியங்களும் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளது என்பதை இலக்கிய வரலாற்றில் நாம் காண்கிறோம். மக்கள் வாழ்வும் , நாகரீகமும் மாறும் போது கலைவடிவங்களிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. படைப்பு முனைப்பு அதிகம் உள்ளவர்கள் தங்கள் ஆற்றல்களுக்கேற்ப பல்வேறு நுட்பங்களுடன் கலந்து தரும் போது அவை புத்துப்பொலிவும் பெறுகின்றன. மக்களுக்கு நன்கு பழக்கமான பழங்காலக் கதைகள் மீண்டும்சொல்லப்படுவதும்  ரசிக்கப்படுவதும் அதுவே மரபாக இருக்கிற சூழ்நிலையில் அவை மக்களின் சொத்தாகக் கருதப்படுகின்றன. பொதுச் சொத்தாக இருக்கும் அவற்றை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை தங்களது என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது.

ஆனால் சினிமாப்பாடல்கள் என்பது புதியதொரு கலைவடிவமாக இருப்பதால் அதன் முன்னோடிகளாக மேல்நாட்டு இசையும் , அவர்களை அடியொற்றியே கலப்பிசையாக உருவான ஹிந்தி திரைப்பட இசையும் நாம் கேட்டுப் பழகாத சில ஒலிநயங்களை கொண்டிருக்கும் நிலையில் அதே போல தமிழிலும் அழகுடனும் ,சுவையுடனும் ,உணர்ச்சியுடனும் இழைத்து தரும் போது அவற்றின் வேறுபாடு புதிய எழுச்சியை உருவாக்குகின்றன.

மெல்லிசைமன்னர்கள்  இசையில் அதிகமாக ஊடுருவிய  லத்தீன் அமெரிக்க மற்றும்  ஹிந்தித்திரையிசையின் இனிய பக்கங்களை நாம் காண முடியும். தமிழ் திரைப்பட இசையமைப்பு என்பது இயந்திரமாக்கப்பட்ட  நிலையில் ஒரு படத்திற்கு ஐந்து ,ஆறு பாடல்கள் என விதிக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாடல்களுக்கான நிறைந்து ஒன்றக்கூடிய ஒலிநயங்களை தமிழுக்கு அப்பாலும் தேட வேண்டிய நிர்பந்தம் இசையமைப்பாளர்களுக்கு உண்டாகிறது.

ரவீந்திரநாத் தாகூர்

ஒருவகையில் இதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் இந்தியாவின் மகாகவி என்று போற்றப்பட்ட ரவீந்திரநாத் தாகூர்! தாகூரின் உலக இசை ஈடுபாடு இந்திய இசையுடனான கலப்பிசைக்கு உந்துதல் கொடுத்தது. 

ஆங்கிலக்கல்வியை முதலில் பெரும் வாய்ப்பைப் பெற்ற  வங்கத்தில் தாகூரின் அறிவு ஒளி பலதிசைகளிலும் பரவிய நிலையில் மேற்கத்தேய இசையின் மீதான ஈடுபாடும் அமைந்தது. வங்காளத்தில் சத்யஜித்ராய் , சலீல்  சௌத்ரி போன்ற கலைஞர்கள் தங்கள் குழந்தைப்பருவத்திலேயே மேற்கத்தேய செவ்வியலிசை கலைஞர்களின் படைப்புகளை இசைத்தட்டுக்களில் கேட்கும் வாய்ப்புகளை பெற்றனர்.

.பின்னாளில் சலீல் சௌத்ரி தனது வீரியமிக்க இசையால் ஹிந்தி திரையுலகில் வாத்தியக்கலவைகளில் மேலை சங்கீதத்தை மிக உன்னதமாகப் பயன்படுத்தி ஹிந்தி திரையிசையை மெருகேற்றினார்.

இதில் ஆச்சர்யம் கலந்த உண்மை என்னவென்றால் திரை இசையமைப்பாளர்களுக்கு ஏதோ ஒரு இசையில் இருந்து ஏதோ ஒரு துரும்பு கிடைத்தாலும் போதும் அதிலிருந்து அற்புதமான , இனிமைமிக்க இசையை முழு நிறைவுடன் வழங்கும் அற்புத ஆற்றல் இருந்தது. உதாரணமாக பீத்தோவன் இசையமைத்த ஒரு சிறிய பகுதியை வைத்துக் கொண்டு சலீல் சௌத்ரி ஒரு விதமாகவும்  மெல்லிசைமன்னர் வேறு விதமாகவும் நிறைவான பாடலை தந்ததை நாம் இங்கே குறிப்பிடலாம்.

பீத்தோவனின் இசைவடிவமான Fur  Elise   என்ற படைப்பு தமிழில் ” மெல்லிசைமன்னரின் இசையில் “என் மனது ஒன்று தான் ” என்ற பாடலின் பல்லவையாக மட்டும் வெளிவந்தது. அதே போல ஹிந்தியில் அதற்கு முன்பே சலீல் சௌத்திரியின் இசையிலும் அப்பாடல் பல்லவையாக வெளிவந்தது. ஆயினும் இரண்டு பாடல்களும் ஆரம்பங்கள் ஒன்றாக இருந்த போதிலும் அவற்றின் பிபகுதிகள் வெவ்வேறு பாடல்களாக அமைந்தன.

 பிற இசையமைப்பாளர்களிடமிருந்து மெல்லிசைமன்னர்கள் பெற்ற இசை அனுபவங்கள் இதுவரை பார்த்தோம்.

அவர்கள் தங்கள் இசைப்படைப்புகளுக்கு கலை உணர்வுடன் புதுப்புது ஆடைகளைப் புனைந்து மிக இயல்பாக  வேறு வேறு பாடல்கள் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். சில சமயங்களில் தங்கள் மேல் திணிக்கும் பலவந்தங்களை திசை திருப்பும் வகையிலும் நான் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பது போல அவர்களை அறியாவண்ணம் அவர்களே நிராகரித்த மெட்டுக்களை அல்லது கேட்ட பாடல்களை , அவர்களே இது புதிதான பாடல் என்று உணர வைத்த சாமர்த்தியத்தையும் காண்கிறோம். மெல்லிசைமன்னர் தானே  இசையமைத்த சில பாடல்களை எடுத்து அவற்றிற்கு புது ஆடை புனைந்து கொடுத்தது போல ஒரே மெட்டை வைத்து  வெவ்வேறு ஜாலங்கள் காட்டி அல்லதுமேலே கூறியது போல பலவிதமான Musical Variations களில் அவற்றை அமைத்து காட்டினர்.  சில சமயங்களில் ஒரே சந்தத்தை வைத்து  வித்தை காட்டினார்கள்.

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு

பேசுவது கிளையா பெண்ணரசி மொழியா  

போன்ற பாடல்கள் ஒரே சந்தத்தில் அமைந்திருப்பதையும் , இவற்றை மாறி மாறிப் பாடிக்கொண்டு இருக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

நாளாம் நாளாம்  திருநாளாம்

நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை 

மல்லிகை முல்லை பூப்பந்தல்  …

இந்தப்பாடல்களும் மேலே குறிப்பிட்ட பாடல்களைப் போலவே ஒன்றை ஒன்று மருவி பாடிக்கொண்டே இருக்கலாம்         

01  சுதந்திர பூமியில் பலவகை   –     – டி.எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன்

      பூமியில் பறப்பதும் வானத்தில்   –  சாந்தி நிலையம்    – டி.எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன்

02  கால்கள் நின்றது நின்றது தான்  – பூஜைக்கு வந்த மலர் – ராகவன் + ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன்

      கன்னி ஒருத்தி மடியில்   –  நீரும் நெருப்பும்    – டி.எம்.எஸ் சுசீலா    – இசை : விஸ்வநாதன் 

      இந்த இரு பாடல்களுள் ” நாளாம் நாளாம் ” பாடல் ஒளிந்திருக்கிறது

03  நினைக்கத்தெரிந்த மனமே  –  ஆனந்த ஜோதி    – சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

      உறவு என்றொரு சொல் இருந்தால் – இதயத்தில் நீ   – சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  

04  அத்தை மக்கள் ரத்தினத்தை   –  பணக்காரக்குடும்பம்    – சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

      யாருக்கு மாப்பிள்ளை யாரோ  – பார்த்தால் பசிதீரும்    – சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  அனுபவம் புதுமை   –  காதலிக்க நேரமில்லை   –  பி.பி.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

      பருவத்தில் கொஞ்பணம் படைத்தவன்   –  டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

06  கல்லெல்லாம் மாணிக்க  – ஆலயமணி   டி.எம்.எஸ் + ஈஸ்வரி  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

      பவளக்கொடியிலே முத்துக்கள் – பணம் படைத்தவன்   – டி.எம்.எஸ் + ஈஸ்வரி  – இசை : விஸ்வநாதன்ராம        

       நாம் ஒருவரை ஒருவர்  – குமரிக்கோட்டம்   – டி.எம்.எஸ் + ஈஸ்வரி  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  தேவியிடம் தேடித் போவேனோ  – சில நேரங்களில் சில மனிதர்கள்   – வாணி – இசை : விஸ்வநாதன்

      கைகொட்டி சிரிப்பார்கள்  – அபூர்வ ராகங்கள்   – ஷேக்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  தண்ணிநிலவு தேனிறைக்க   – படித்தால் மட்டும் போதுமா  – சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

      அத்தை மகனே  – பாதகாணிக்கை   – சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

      நிலம் பார்த்து மெதுவாக உனைநாடாவா ….அத்தை மகனே …யார் யார் யார் அவள் யாரோ.

09  அன்புள்ள மான்விழியே – குழந்தையும் தெய்வமும்   – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

      கொடியில்  இரண்டு மலர் உண்டு – குழந்தையும் தெய்வமும்   – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

      செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் –    – டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்

10  புது வீடு வந்த நேரம்  – எங்க பாப்பா    – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

      மன்னிக்க வேண்டுகிறேன்  – இருமலர்கள்   – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

11  இளமை நாட்டிய சாலை  – கல்யாணமாம் கல்யாணம்   – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

      காதலின் போன் வீதியில்   – பிள்ளையோ பிள்ளை   – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

12  காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் – பாக்கியலட்சுமி 1961 – சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      ஆதி மனிதன் காதலுக்கு பின்  – பலே பாண்டியா 1961 – பி.பி.எஸ். ஜமுனாராணி – இசை விஸ்வநாதன்  ராம.

13  சொல்லவோ சுகமான கதை சொல்லவோ  – பாக்கியலட்சுமி 1961 – சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      நினைத்தால் சிரிப்பு வரும்  – பாமா விஜயம் – சுசீலா- இசை விஸ்வநாதன்

14  பொட்டு வைத்த முகமோ  – சுமதி  என் சுந்தரி 1961 – எஸ்.பி.பி – இசை விஸ்வநாதன்

      சுமை தங்கி சாய்ந்தால் – தங்கப்பதக்கம் 1971 – டி.எம்.எஸ் – இசை விஸ்வநாதன்

16  ஓ.. லட்சுமி  ஓ ஷீலா  –  நீல வானம் 1968 – எல்.ஆர்.ஈஸ்வரி – இசை விஸ்வநாதன்

      நல்வாழ்த்து நான் சொல்லுவேன் – பட்டிக்காடா பட்டணமா 1973 – டி.எம்.எஸ் – இசை விஸ்வநாதன் [ அது தான் மானம் …]

17  பாட்டொன்று தருவார்   –  சர்வர் சுந்தரம்  1968 – ஈஸ்வரி  + சுசீலா  –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      சிலை எடுத்தான் ஒரு    –  சர்வர் சுந்தரம்  1968 – ஈஸ்வரி  + சுசீலா  –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

18  ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ்    –  என் கடமை  1964 – டி.எம்.எஸ்   –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      கடலோரம் வாங்கிய காற்று    –  ரிக்சாக்காரன் 1972 – டி.எம்.எஸ்   –  இசை விஸ்வநாதன்

18  புன்னகையில் ஒரு பொருள் வந்தது   –  பவானி 1968 – டி.எம்.எஸ்  + சுசீலா  –  இசை விஸ்வநாதன்

      சிரித்தாள் தங்கப்பதுமை    – Kannan என் காதலன் 1968 – டி.எம்.எஸ்  + சுசீலா  –  இசை விஸ்வநாதன்

      மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்    –  தெய்வத்தாய் 1964 – டி.எம்.எஸ்  –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      நான் உங்கள் வீட்டு பிள்ளை    –  புதியபூமி   1968 – டி.எம்.எஸ் – இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

19  அமைதியான ந்தியினிலே ஓடம் –  ஆண்டவன் கட்டளை  1964 – டி.எம்.எஸ் + சுசீலா-  விஸ்வநாதன் ராம.

      அந்த மாப்பிள்ளை காதலித்தான்- பணம் படைத்தவன்   1964 – டி.எம்.எஸ் + சுசீலா  –  இசை விஸ்வநாதன்

      அம்மா கண்ணு சும்மா சொல்லு    –  ஞான ஒளி  1971 – டி.எம்.எஸ் + சுசீலா  –  இசை விஸ்வநாதன்

      வட்ட வட்ட பாறையில் வந்து நிற்கும்  – பழனி 1965 – சீர்காழி + சுசீலா  –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

20  வெத்திலை போட்ட பத்தினி     –  வீராதிருமகன் 1964 – டி.எம்.எஸ்  –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      சொந்தமும்மில்லை பந்தமுமில்லை   – ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார்   1964 – ஜி .கே. வெங்கடேஷ்    –  இசை வி

21  தானே தனக்குள் ரசிக்கின்றாய்   –  பேரும் புகழும்   – டி.எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன்   

      அழகென்னும் ஓவியம் இங்கே –  ஊருக்கு உழைப்பபவன்  – ஜேசுதாஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

22  நானும் கூட ராஜா தானே –  புன்னகை  – டி.எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன்

      நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்  –  ராஜபார்ட் ரங்கதுரை   – டி.எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன்

      நான் பார்த்தா பைத்தியக்காரன்   –  உழைக்கும் கரங்கள்   – டி.எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன் 

23  கண்ணனை நினைக்காத நாளில்லையே  –  சீர்வரிசை 1974- எஸ்.பி.பி  + சுசீலா   –  இசை விஸ்வநாதன் 

      ஜமுனா நதி இங்கே     –  கௌரவம்   1974 – எஸ்.பி.பி  + சுசீலா   – இசை விஸ்வநாதன் 

24  பெற்றெடுத்த உள்ளம் என்றும்  –  கண்ணா நலமா 1972  – டி.எம்.எஸ்  – இசை : விஸ்வநாதன்   

      சத்தியத்தின் சோதனைக்கு   –  கிரககப்பிரவேசம் 1972  – டி.எம்.எஸ்  – இசை : விஸ்வநாதன்

25  இது மார்கழி மாசம்     –  பிராப்தம் 1973 – ஈஸ்வரி   –  இசை விஸ்வநாதன்

      கல்யாண வளையோசை – ஊருக்கு உழைப்பபவன்  1974 – டி.எம்.எஸ் + சுசீலா  –  இசை விஸ்வநாதன்

26  மார்கழி பனியில்   –  முத்தான முத்தல்லவோ  1976 – .எஸ்.பி.பி     –  இசை விஸ்வநாதன்

      மன்மத லீலை மயக்குது ஆளை    –  மன்மதலீலை   1976 – .எஸ்.பி.பி     –  இசை விஸ்வநாதன்

      எதற்கும் ஒரு காலம் உண்டு  –  சிவகாமியின் செல்வன்  1974 – .எம்.எஸ்.வி      –  இசை விஸ்வநாதன்

       வானிலே மேடை  அமைந்தது   –  நினைத்தாலே இனிக்கும் 1979 – .எம்.எஸ்.வி      –  இசை விஸ்வநாதன்

27  தண்ணிலவு தேனிறைக்க  – படித்தால் மட்டும் போதுமா  1962 – சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      அத்தை மகனே  – பாதகாணிக்கை  1962 – சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி [ நிலம் பார்த்து மெதுவாக]   

       * யார் ஆர் யார் அவள் யாரோ – பாசமலர்  1961 – பி.பி.எஸ் + சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

28  மெல்ல வரும் காற்று   –  கௌரி கல்யாணம் 1968 – டி.எம்.எஸ் + சுசீலா  –  இசை விஸ்வநாதன்

      நல்ல இடம் நான் வந்த இடம்   – கௌரி கல்யாணம் 1968 – டி.எம்.எஸ் + சுசீலா  –  இசை விஸ்வநாதன்

29  கல்யாண வளையோசை கொண்டு   – ஊருக்கு உழைப்பவன்   – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

      கண்ணுபடப் போகுது கட்டிக்கையா – சொந்தம் – எல்.ஆர் ஈஸ்வரி – இசை : விஸ்வநாதன் 

30  விளக்கேற்றி வைக்கிறேன் – சூதாட்டம் 1971 – சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்   

      இதோ எந்தன் தெய்வம்  – பாபு 1972 – டி.எம்.எஸ்  – இசை : விஸ்வநாதன்

கொடுத்தது.

மெல்லிசைமன்னர்களின் இசையில் பிற இசைஅமைப்பாளர்களின் தாக்கத்தை காணும் நாம் , அவர்களுக்குப் பின்வந்த இசையமைப்பாளர்களும் , ஏன்  அவர்களது சமகால இசையமைப்பாளர்களும் இவர்களுடைய இசையில் உந்துதல் பெற்றதையும் காண்கிறோம். தமிழில்  அதிக புகழபெற்ற சில பாடல்களில் இவர்களது தாக்கத்தை நாம் வியப்புடன் பார்க்கின்றோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாயின் ” மன்னவன் வந்தானடி தோழி ” என்ற புகழ் பெற்ற பாடலை எடுத்துக்கட்டாகக் கூறலாம்.

01  விந்தியம்  வடக்காக – தெனாலி ராமன் 1956  – வி.என்.சுந்தரம் –  இசை விஸ்வநாதன்  ராமமூர்த்தி

      அம்பகிகாபதி படத்தில் வரும் தொகையறாக்கள் இவ்விதமாக இருக்கும்

02  வெட்கமாய் இருக்குதடி   –  பார் மகளே பார்  1964 – சூலமங்கலம்  + லீலா   –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      மன்னவன் வந்தானடி   –  திருவருட்செல்வர்  1967 –  சுசீலா  –  இசை: கே.வி.மகாதேவன் 

03  கல்யாண வளையோசை கொண்டு   – ஊருக்கு உழைப்பவன்   – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

      மாம் பூவே சிறுமைனாவே   – கல்யாணமாம் கல்யாணம்   – ஜேசுதாஸ்  + சுசீலா – இசை : சந்திரபோஸ்

04  ஒத்தையடி பாதையிலே   – கல்யாணமாம் கல்யாணம்   – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன்

      தன்னந்தனியாக நீ வந்த போது    – சங்கமம்  – டி.எம்.எஸ் + சுசீலா – இசை : ராமமூர்த்தி

05  நாளாம் நாளாம்   – காதலிக்க நேரமில்லை   – பி.பி.எஸ்  + சுசீலா – இசை : விஸ்வநாதன்

      பூத்திருக்கும் விழியெடுத்து   – கல்யாண மண்டபம்  – பி.பி.எஸ் + சுசீலா – இசை : பார்த்தசாரதி 

06  பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள்  – தெனாலி ராமன் 1956  – வி.என்.சுந்தரம் –  இசை விஸ்வநாதன் 

      வர சொல்லடி அவனை – பாதுகாப்பு – சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்   

07  சித்திர பூவிழி வாசலிலே –  இதயத்தில் நீ 1963  – சுசீலா + ஈஸ்வரி  – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி  

      நவராத்திரி சிவ ராத்திரி   – நவராத்திரி 1963  –  சுசீலா   – இசை : மகாதேவன்

08  ராஜாவின் பார்வை   –  அன்பே வா   1966  – டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்    

      இந்த ராகமும் இந்த தாளமும்     –  என் ரத்தத்தின் ரத்தமே  1990   – சந்தியா  – இசை : சங்கர் கணேஷ்

09  பொன்னெழில் பூத்தது  –  கலங்கரை விளக்கம்  1966 – டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்    

       எனது விழியில் உனது பார்வை –  நான் ஏன் பிறந்தேன்  1972   – டி.எம்.எஸ் + சுசீலா  – இசை : சங்கர் கணேஷ்

10  அழகுக்கு அழகு      –  வீரத்திருமகன் 1964 – சுசீலா  –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

காலங்கள் தோறும் திருடர்கள்     – இருவர் உள்ளம்   1964 – டி.எம்.எஸ் + சுசீலா  –  இசை கே.வி.மகாதேவன்

11  நான் பேச நினைப்பதெல்லாம்   –  பாலும் பழமும்  1961- டி.எம்.எஸ் + சுசீலா   –  இசை விஸ்வநாதன் ராம

       கடலோரம் வீடு கட்டி    –  கஸ்தூரி திலகம்  1974 – டி.எம்.எஸ் + சுசீலா – இசை ஜி.தேவராஜன்

12  வெட்கமாய் இருக்குதடி   –  பார் மகளே பார்  1964 – சூலமங்கலம்  + லீலா   –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

      மன்னவன் வந்தானடி   –  திருவருட்செல்வர்  1967 –  சுசீலா  –  இசை: கே.வி.மகாதேவன் 

13  நான் நன்றி சொல்வேன் என்  –  குழந்தையும் தெய்வமும்  1965 – சுசீலா   –  இசை விஸ்வநாதன் 

      பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு  – தாய்க்கு தலை மகன் 1966 -டி.எம்.எஸ். + சுசீலா –  இசை KVM

14  பூமாலையில் ஓர் மல்லிகை –  ஊட்டிவரை உறவு  1967  – டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்    

      கண் ஒரு பக்கம்   –  நிறைகுடம் 1968  – டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : வி.குமார்  

15  ஆறோடும்  மண்ணில் எங்கும் –  பழனி  1963  – டி.எம்.எஸ் + சீர்காழி + பி.பி.எஸ்   – இசை : விஸ்வநாதன் 

       நேரான நெடுஞ்சாலை   –  காவியத்தலைவி  1969 – எம்.எஸ்.வி    – இசை : வி.குமார்    

16  இறைவன் உலகத்தை படைத்தானா   –  உனக்காக நான்   1979  – ஜேசுதாஸ்     – இசை : விஸ்வநாதன்    

 பூ கொடியின் புன்னகை   –  இருவர் 1986   – சந்தியா  – இசை : ஏ.ஆர். ரகுமான்

17  தங்கப்பதகத்தின் மேலே –  எங்கள் தங்கம்  1968 – டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்    

      என்ன விலை அழகே   –  காதலர் தினம்  1998   – உன்னி கிருஷ்ணன்   – இசை : ஏ.ஆர். ரகுமான்

18 பாட்டுக்கு பாட்டெடுத்து – படகோட்டி1964- டி.எம்.எஸ் + சுசீலா   –  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

       பொன்மானைத் தேடி   – எங்க ஊரு ராசாத்தி  1980 – வாசுதேவன் + சைலஜா  – இசை கங்கை அமரன் 

19  வா வெண்ணிலா  – மெல்ல திறந்தது கதவு1986 – எஸ்.பி.பி  + ஜானகி   –  இசை விஸ்வநாதன்

       ஏ வெண்ணிலா என் நெஞ்சமே – இது ஒரு தொடர் கதை 1986 – எஸ்.பி.பி + ஜானகி   – இசை கங்கை அமரன்  

இளையராஜா

01  ஓ ஓ.தேவதாஸ்  –  தேவதாஸ் 1953  – கே.ராணி + கே.ஜமுனாராணி  – இசை : சுப்பராமன் /விஸ்வநாதன்  ராமமூர்த்தி  

      அடி வான்மதி என் காதலி  –  சிவா1990   – எஸ்.பி.பி. + சித்ரா  – இசை : இளையராஜா

       ஓ..ஓ…பார்ட்டி நல்ல பார்ட்டி தான்   – இதயம் 2991   – மலேசியா வாசு  + குழு   – இசை : இளையராஜா

02  நெஞ்சம் மறப்பதில்லை  –  நெஞ்சம் மறப்பதில்லை  1963  – சுசீலா + பி.பி.எஸ்    – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி  

      வான் உயர்ந்த சோலையிலே  –  இதயக்கோயில் 1986   – எஸ்.பி.பி. + Janaki   – இசை : இளையராஜா

03  சிங்காரப்புன்னகை   –  மகாதேவி 1957  –  எம்.எஸ்.ராஜேஸ்வரி    – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி  

      ராசாத்தி உன்னை  –  வைதேகி காத்திருந்தாள் 1985  – ஜெயசந்திரன்  – இசை : இளையராஜா

04  சித்திர பூவிழி வாசலிலே –  இதயத்தில் நீ 1953  – சுசீலா + ஈஸ்வரி  – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி  

      கொட்டிக் கிடக்குது செல்வங்கள்   – வாழ்க வளர்க 1986  –  சித்ரா  – இசை : இளையராஜா.

மெல்லிசைமன்னரின் இசைமுறையை சங்கர் கணேஷ்  , வி.குமார் நேரடியாக பின்பற்றினர். அவர்களுடைய பல பாடல்கள் மெல்லிசைமன்னரின் பாணியிலேயே இருக்கும். இவர்களும் பல இனிய பாடல்களை தந்ததை யாரும் மறுக்க முடியாது.

ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவையாகவும், வித்தியாசமான  இனிய ஒலிகளையெல்லாம் ஒன்றறக் கலப்பதாகவும் அவற்றினூடே புதிய கலை அனுபவம் பெற வைப்பதும் புதிய இசைமரபின் வளர்ப்புப்பண்ணையாகவும் உருவாகிய மெல்லிசைமன்னர்களின் இசை தமிழ் திரை  இசையை புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றது.

கொண்டாடப்பட்ட இசையாக இருக்கும் திரை இசையில் தமதுமரபு சார்ந்தும் பிற இசைமரபுகளையும் காலத்தேவை கருதி ஆங்காங்கே இணைத்து புதிய மறுபடைப்பாங்ககளாக உருவாக்கிக் காட்டி தமக்கு பின்வந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும் மெல்லிசைமன்னர் விளங்கினார்.

மறுபடைப்பாக்கங்களின் நுணுக்கம் புரியாத , இசையாற்றலற்ற  சிலர் ரீமிக்ஸ் என்ற பெயரில் மெல்லிசைமன்னர்களின் பாடல்களை குதறிய கொடுமைகளும்  1990 க்கு  பின் வந்தவர்களால்  நிகழ்ந்தது.  அதை மெல்லிசைமன்னர் ” ரீமிக்ஸ் என்பது கற்பழிப்புக்கு சமமானது ” என்று கண்டித்ததும் நம் காலத்தில் தான் நிகழ்ந்தது.

[ தொடரும்]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *