முன்மாதிரி:சின்னத்தம்பி சுரேந்திரன்

Visits of Current Page:1003
GlobalTotal: 206965

நீண்ட தொலைதூர கடந்து நாட்களின் வரலாறுகளைக் கொண்டிருக்கும் மனித குலத்தின் வரலாற்றுப் பக்கங்களில் நாம் கண்டடையக்கூடிய தூரம் வரையில் இருந்து வரலாறுகளில் மனிதனின் வாழ்வியலின் மறுசீரமைப்பில் சமூகக் கட்டமைப்பு மிக முக்கியமாக இருத்துவிடுகிறது. இச்சமூகத்தின் கட்டமைப்பில் கல்வி என்பது ஓர் நிலைக் கண்ணாடியாக அம்மக்களின் வாழ்வின் நாகரீக சிறப்பையும் மானிட நேயம், மனித நேயம் என்பவற்றையும் வெளிப்படுத்துவதாக இருந்துவிடுகிறது.இக்கணச்சூழல் என்பது இலங்கைவாழ் தமிழ் மக்களின் அரசியல் காலமும் சர்வதேசமும் நாமும் கலைந்துப்போட்ட நேரத்தில் இடப்பெயர்வுகளுக்கிடையில் எம் தமிழ்ச் சமூகம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அந்த காட்சிகள் பலவாக இருந்தாலும் எம் ஊரிலும் அது நிகழ்ந்திருக்கிறதென்பதில் பெருமை கொள்வதோடு வரும் காலத்தில் பல முன்மாதிரிகளை உருவாக்கிடும் நோக்கில் இதை பகிர்வு செய்வதில் மகிழ்ச்சியாகிறோம்.

சின்னத்தம்பி சுரேந்திரன்; உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை பிறப்பிடமாகக் கொண்டவர். சின்னத்தம்பி பூரணம் என்போருக்கு ஜந்தாவது மகனாக பிறந்தார்.

1.ரவீந்திரன்- விரிவுரையாளர் (யாழ்ப்பாண தொழிநுட்பவியல் கல்லூரி)
2.மகேந்திரன்-பொறியியலாளர்(சிங்கப்பூர்)
3.லலிதா- ஆசிரியர்(கொழும்பு)
4.வனிதா-அபிவிருத்தி உத்தியோகத்தர்(மட்டக்களப்பு- நீதிமன்றம்)

சின்னத்தம்பி சுரேந்திரன்

தனது ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வியை யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் பயின்றார். அதன் பிறகு தனது உயர் தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் பயின்றார். உயர் தரத்தில் கணிதப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார்.

சின்னத்தம்பி சுரேந்திரன்;

தனது பொதுச்சேவையினை யாழ்ப்பாண மாவட்ட வலிகாமம் பகுதியில் முகாமைத்துவ உதவியாளராக ஆரம்பித்து பின் வடமராட்சியிலும் பணிபுரிந்தார். பின்னாடி வடக்கு கிழக்கு மாகாணப் பொது நிர்வாக அமைச்சின் முகாமைத்துவ உதவியாராக பணி உயர்வு பெற்றுச் சென்றார்.

சின்னத்தம்பி சுரேந்திரனின் கல்வி மீதான ஆர்வமும் விருப்பமும் குறைந்துவிடவில்லை. வேலைச்சூழலிலும் ‘முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் வகுப்பிற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையைப் பற்றிச் சிந்தித்தார். அவரது முயற்சியில் முதல் தரத்தில் சித்தி பெற்று வட மாகாண கல்வித் திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமைக்கு பதவியுயர்வு பெற்றுச் சென்றார். இது அவரது அயராதுழைப்பை வெளிப்படுத்தியது. மீண்டும் ‘இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை எழுதி சித்தியும் அடைந்து கொழும்பு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உதவிச் செயலாளராக கடமைக்கு உயர்வு பெற்றார். பின்பு இடமாற்றலாகி வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சின்னத்தம்பி சுரேந்திரன் 2021-11-03 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆக்கம் நேதாஜி

Leave a Reply