முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்…!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்…!!

இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
எங்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்…!!

சிறு பருவகாலம் தொட்ட நம் நட்புக்குள்
ஏழு ஜென்ம பந்தம்…!
நட்பென்ற ஒன்றுக்குள்
நாம் சேர்ந்து நின்றோம்..!!

நான் உன்னை சந்தித்திருக்காவிட்டால்
நண்பனுக்காக எதையும் செய்யும்
நண்பன் ஒருவன்
எனக்கு கிடைத்திருக்கமாட்டான்… !

நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்…!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்…!!


Loading

Spread the love