மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின்

நினைவுநாள் இன்று- 11.06.2021


மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் நீண்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளரான துரைராஜா அவர்கள் மக்களால் மதித்து வணங்கப்பட்ட பேராசிரியராக இந்த மண்ணிலே மிடுக்கோடு பவனி வந்தவர்…. அவரே பேராதனைப் பல்கலைக் கழகத்தின் “பொறியியல் பீடத்தில் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும், “துரைராஜா தேற்றத்தின்” (Thurai’s Theoy) சொந்தக்காரர்.
அவரது வாழ்க்கையின் அடிச்சுவட்டில்…….
• உடுப்பிட்டி,இமையாணன் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கிராமத்தில் 1934.11.10 ஆம் திகதி பிறந்தார்.
• தனது ஆரம்பக் கல்வியில் இருந்து எஸ்.எஸ்.சி வகுப்பு வரை 11 ஆண்டுகள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் முதல்தர மாணவராக்க கற்றுக் கொண்டிருந்த பொழுது, அந்த காலப்பகுதியில் அங்கு ஏச்.எஸ்.சி. உயர்தர வகுப்புக்கள் இன்மையால் ,பின்னர் எச்.எஸ்சி உயர்தர வகுப்பைக் கற்பதற்காக காட்லிக் கல்லூரியிலும் சேர்ந்து புகழ் பெற்ற மாணவர் என்ற பெயர் எடுத்து 1953 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்திற்குத் தெரிவு செய்யப் பட்டார்.

•சிறந்த பெறுபேற்றைப் பெற்ற துரைராஜா அவர்கள், 1957 இல் இலங்கை பல்கலைக் கழகத்தில் குடியியல் பொறியியல் பேராசிரியராக நியமிக்கப் பட்டார்.
• 1958 இல் பகிரங்க வேலைவாய்ப்பில் கனிஷ்ட உதவிப் பொறியியலாளராகத் தெரிவு செய்யப் பட்டார்.
• 1958 ஒக்ரோபரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கலாநிதி (PhD) பட்டத்திற்கான ஆய்வைச் சமர்ப்பித்து பொறியியல் கலாநிதியாக உயர்ந்தார்
• 1962 இல் இலண்டனில் உதவிப் பொறிமுறைப் பொறியியலாளராகச் சேவையாற்றினார்.
• 1962 இல் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் குடியியற் பொறியியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
• 1969 இல் கனடா வாட்டலூ பல்கலைக் கழகத்தில் விடுப்பு பேராசிரியராகப் பதவியை வகித்தார்.
• 1971 இல் மீண்டும் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேராதனை வளாகத்தில் குடியியற் பொறியியல் பேராசிரியராக நியமனம் பெற்றார்.
• 1975 இல் இலங்கைப் பேராதனை வளாகத்தில் குடியியற் பொறியியல் பீடாதிபதியாக நியமனம் பெற்றார்.
• 1977 இல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழக்ததில் விடுப்பிலான பேராசிரியராகப் பதவிஏற்றார்.
• 1982 இல் பேராதனைப் பல்கலைக் கழகம் உருவாக்கபட்டதும் அதில் பொறியியல் பீடாதிபதியாக நியமனம் பெற்றார்.
• 1985 ஆம் ஆண்டு முதல் இலங்கைத் திறந்த பல்கலைக் கழத்தின் குடியியற் பொறியியல் பேராசிரியராக நியமனம் பெற்றார்.
• 1987 இல் இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் குடியியற் பொறியியல் பீடாதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.
• 1988 தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில் யுத்தகாலத்திலும் துவிச்சக்கர வண்டி யிலேயே பயணம் செய்து தமிழ் மாணவர்களின் கல்விக்காக அயராது உழைத்து வந்தார்.

• 1993 இல் “தமிழ் தேசிய உணர்வுடன் தனது வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்து கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக ஆற்றிவரும் அரும்பணியைப் பாராட்டி தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களினால் “மாமனிதர்” என்ற உயரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்
• 1993 இல் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் மாமனிதர் பேராசிரியர் அ.துரைராஜா அவர்களைக் கௌரவிக்கும் வகையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் வரலாறு காணாத முறையில் கௌரிவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.இதில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள் மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கில் உடுப்பிட்டி மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு அவரைக் கௌரவித்தனர்.
• 1994 இல் மீண்டும் திறந்த பல்கலைக் கழகத்தில் பணியாற்றச் சென்றார்.
• இத்தனை அளப்பரிய பணிகளையும் ஆற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் லியூக்கேமியா நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
• 1994.96.11. அன்று கொழும்பு மருத்துவ மனையில் இந்த மண்ணில் இருந்தும் மறைந்து அமரத்துவம் அடைந்தார்.
கல்வி அபிவிருத்தியில் மிகவும் தெளிவான சிந்தனையையும், தூரநோக்கினையும் கொண்டிருந்த அமரர் பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்கள், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் 1993 இல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய பொழுது,

வடமாகாணத்தின் பாடசாலைகள் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் செயற்படவேண்டுமானால் அவை தொடர்ந்தும் மாகாணத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளாகவே இருக்க வேண்டும்.. எந்த ஒரு சந்தர்ப்பத் திலும் எங்களுடைய தனித்துவம்மிக்க பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகள் என்ற மாயைக்குள் சிக்கவைத்து அவற்றின் தனித்துவத்தை இழந்துவிடாது பார்ப்பது யாழ்ப்பாணக் கல்விச் சமுகத்தின் தலையாய இலக்காக இருக்க வேண்டும்
என்ற தீர்க்கதிரசனமான கருத்தைத் தெரிவித்த பொழுது, அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் இன்று சில சுயநலம்மிக்க அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியைப் பெருக்குவதற்காக எழுந்தமானமாக யாழ்ப்பாண்த்தின் முன்னணிப் பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது,அமரர் பேராசிரியருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியாது…!
பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா. அவர்களின் நினைவுநாளான இன்று அன்னாருக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலிகளைத் தெரிவிக்கின்றோம்…!

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *