புத்தாண்டே புத்துயிர் தந்திட வா

Visits of Current Page:564
GlobalTotal: 263196

புத்தாண்டே புத்தாண்டே
பூமுகம் கொண்டு வா
புதுயுகம் படைக்க வா
வஞ்சமில்லா மழையோடு வா
வயலால் வம்சம் செழித்திட வா
வற்றாத மகிழ்ச்சியை தந்திட வா
வறட்சியில்லா விடியல் படைத்திட வா
வக்கிரமற்ற அன்பைப் பொழிய வா
வாட்டமில்லா வசதி செய்திட வா
துரோகமில்லா நட்பு தொடர்ந்திட வா
நச்சுயில்லா பாசம் படர்ந்திட வா
வசந்தமான வாழ்வு வளமாக்கிட வா
வீழாத தர்மம் நிலைத்திட வா
வன்முறையைத் துவம்சம் செய்திட வா
வறுமையின் நிறம் மாற்றிட வா
களவில்லா கருணை பரப்பிட வா
இயற்கை கொலையில்லா
காலத்தைப் படைத்திட வா
புத்தாண்டே புத்துயிர் தந்திட வா
இரா.பாலாஜி

Leave a Reply