புசிக்காத பழம்

புசிக்காத பழம்

ஊருக்கு மத்தியிலே

உயர்ந்து பரந்து வளர்ந்த மரம்

ஊரார் அணைவதில்லை

உயிரினமும் வருவதில்லை

மரம் நிறையப்பழம்

பறிப்பாருமில்லை

புசிப்பாருமில்லை

தரையெங்கும் பரவி சொரிந்து கிடக்கிறது.

ஈ எறும்பு கூட ஊர்வதில்லை மொய்ப்பதில்லை

காரணம்

பழுத்தும் பயனென்ன? பழந்தின்னப் பயமென்ன?

சொல்லுங்களேன்

நாமும் இம்மரம் போல்

வாழலாமா?

பயனில்லா வாழ்வினால்

பாருக்குப் பயனென்ன?

யாருக்குப் பயனென்ன?

மி.சூசைதாசன்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *