நாஸ்கா கோடுகள்,6 நூற்றாண்டுகளாக நீடிக்கும் மர்மம். 

பெருவில் உள்ள லிமாவில் இருந்து 250 மைல் தொலைவில் ஒரு பெரிய வறண்ட நிலப்பகுதி உள்ளது. இந்த பகுதி பழமையான மர்மம் வாய்ந்த விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அந்த தட்டையான பூமியில் 170 சதுர மைல் பரப்பளவில் விசித்திரமான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை ஆழமான குழிகளாக வெட்டப்படவில்லை. ஆனால் தூரத்தில் இருந்து பார்க்கும்போது அவை பல உருவங்களாக தெரிகின்றன. அவை ஆறு முதல் பன்னிரெண்டு அடி அகலமாக உள்ளன. அமெரிக்காவில் முன்னாள் வாழ்ந்த நாஸ்கா என்னும் இனத்தாரால் இந்த கோடுகள் வரையப்பட்டதால் இது நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படுகிறது.

இவை 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோடுகள் 30 மைல் தூரம் வரை உள்ளன. அந்த கோடுகளை உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு சுழலாக கைரேகை போல தெரிகின்றன. நாஸ்கா கோடுகளை வரையும்போது எந்தவொரு சரியான முறையையும் அவர்கள் பயன்படுத்தப்படவில்லை என இதன் மூலம் தெரிகிறது.

1500 களில் முதல் முறையாக இந்த கோடுகளை கண்ட பயணிகள் ஏதோ மேடு பள்ளமான சாலை உள்ளது என நினைத்தனர், ஆனால் கடந்தகால நாகரிகத்தின் சிக்கலான கோடுகள் அவை என அவர்களுக்கு தெரியவில்லை. 1927 வரையிலும் கூட இந்த நாஸ்கா கோடுகளை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

ஒரு நாள் பெருவை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளரான டோரியியோ மெஜியா ஜெஸ்பே என்பவர் மலைகளின் வழியே சென்றுக்கொண்டிருந்த போது மலை உச்சியில் இருந்து பெருவின் வறண்ட நிலப்பகுதியை பார்த்தார். உயரத்தில் இருந்து பார்த்தால் தான் நாஸ்கா கோடுகளில் உள்ள உருவங்கள் தெரியும். மலையில் இருந்து பார்த்ததால் டோரியியோவுக்கும் அந்த உருவங்கள் தெரிந்தன.

பாலைவனத்தில் இருக்கும் பள்ளங்கள் பண்டைய சாலைகளின் இடிபாடுகள் அல்ல. அவை திட்டமிடப்பட்டு வரையப்பட்டவை என அவர் தெரிந்துக்கொண்டார். அவை பூமியில் செதுக்கப்பட்ட சின்னங்கள் என்றும் தரை மட்டத்தில் இருந்து பார்த்தால் அவை பள்ளங்களாக மட்டுமே தெரியும் என்றும் அவருக்கு தெரிந்தது.

இந்த நிகழ்வே நாஸ்கா கோடு குறித்து வெளி உலகிற்கு தெரிய ஆரம்பமாக அமைந்தது. அடுத்த ஒரு நூற்றாண்டாக ஆய்வாளர்கள் உலகின் மிகவும் மர்மமான நாஸ்கா கோடுகளை ஆராய துவங்கினர்.

பெருவில் உள்ள ரியோ கிராண்டே டி நாஸ்கா நதி படுக்கையில் சிக்கலான வடிவமைப்புடன் அமைந்துள்ள நாஸ்கா கோடுகள் அதை பற்றி கூறப்படும் அமானுஷ்ய விளக்கங்கள் காரணமாக பிரபலமாக உள்ளன. இந்த அமானுஷ்ய கோட்பாடுகளை நம்புபவர்கள் கூறும்போது “சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோடுகளை வரைந்த நாஸ்கா இன மக்கள் பறக்கும் சக்தி இல்லாமல் இவ்வளவு பெரிய கோடுகளை பொறித்து உருவங்களை பொறித்திருக்க முடியாது.

ஏனெனில் மேல்நோக்கி உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே நாஸ்கா கோடுகளில் என்ன படம் வரையப்பட்டுள்ளது என்பதே தெரியும்.” என்று அவர்கள் கூறுகின்றனர்.

எனவே அவர்களுக்கு ஏலியன்கள் (அயல் கிரக உயிரினங்கள்) உதவி இருக்க வேண்டும். அவர்களின் உதவியோடுதான் நாஸ்கா இன மக்கள் இந்த கோடுகளை வரைந்திருக்க முடியும். விண்வெளியில் இருந்து வரும் ஏலியன்களுக்கு தெரிவதற்காக கூட அவை பெரிதாக வரையப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதில் மனிதர்கள், பூச்சிகள், பறவைகள், மீன், மரங்கள் மற்றும் பூக்கள் போன்ற இயற்கையை சித்தரிக்கும் வரைப்படங்களே வரையப்பட்டுள்ளன. நாஸ்கா கோடுகளில் விண்வெளி வீரரின் உருவமும் இடம் பெற்றுள்ளது. அது விண்வெளி உடையில் மனிதனை போல தலையை கொண்ட உருவமாக இருக்கிறது.

சுவிஸ் எழுத்தாளரான எர்ச் வான் டெனிகன் என்பவர் அதில் உள்ள சில உயிரியல்புகள் (வரைப்படங்கள்) வேற்றுக்கிரக ஜூவ ராசிகளை வர்ணிக்கின்றன என நம்பினார். இதுக்குறித்து 1968 ஆம் ஆண்டு இவர் சேரியட்ஸ் ஆஃப் காட்ஸ் எனும் புத்தகத்தை வெளியிட்டார். இது மிகவும் பிரபலமானது.

இந்த புத்தகம் நாஸ்கா வரிகளை மிகவும் பிரபலப்படுத்தியது. மேலும் நாஸ்கா அதிகப்பட்சம் புராண கதைகளையே உருவாக்கியது. கி.மு 100 முதல் கி.பி 800 வரை ரியொ கிராண்டே டி நாஸ்கா நதி படுக்கையில் வறண்ட நதி படுக்கையில் வசித்து வந்த நாஸ்கா இனத்தினர் பதப்படுத்தப்பட்ட உடல்களை செய்யும் மம்மி முறையை அறிந்து வைத்திருந்தனர்.

இதனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல பதப்படுத்தப்பட்ட உடல்களை கண்டறிந்தனர். அவற்றில் சில சடலங்களின் மண்டை ஓடுகள் விசித்திரமாக இயற்கைக்கு மாறாக நீண்டு இருந்தன. அதன் பின்னர் மர்மமான மூன்று விரல் கொண்ட மம்மி கண்டுப்பிடிக்கப்பட்டது. இது 2017 ஜூன் அன்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அது மனிதனாக இருக்க முடியாது என அவர்கள் நம்பினர்.

எனவே நாஸ்கா கோடுகளை வரைவதில் வேற்று கிரகவாசிகள் பங்கு வகித்தனரா? எனில் கண்டிப்பாக இல்லை.

பூமிக்கு வேற்று கிரகவாசிகள் வருகிறார்கள் என்கிற கதை பலருக்கு பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு அதிகப்பட்சமான சாத்திய கூறுகள் இருக்கும் பட்சத்தில் தான் அதை உண்மை என கண்டறிய முடியும். நாஸ்கா கோடுகளில் அப்படியான எந்த மர்மமும் இல்லை. பூமியை சேர்ந்த விஷயங்களே அதில் உள்ளதே தவிர பூமியை தாண்டிய விஷயங்கள் அதில் இடம் பெறவில்லை.

பிரமிடாக இருந்தாலும் நாஸ்கா கோடாக இருந்தாலும் அதை செய்து முடிக்க நம் முன்னோர்கள் தொழில்நுட்ப ரீதியாகவே கடினமான சாதனையை செய்துள்ளனர். ஆனால் அதை எப்படி செய்தார்கள் என்பதே வரலாற்றில் நெடு நாளைய கேள்வியாக உள்ளது.

ஆயிரகணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட வானிலை காரணமாக நாஸ்கா கோடுகள் உருவாக்கப்பட்ட பள்ளங்கள் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த பள்ளங்களின் அடியில் மஞ்சள் மணல் காணப்படுகிறது. இந்த வண்ண வேறுப்பாடுகளே எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் நாஸ்கா கோடுகளை தனித்துவமாக காட்டுகின்றன.

அந்த வடிவமைப்புகளை சரியாக பூமியில் செதுக்க நாஸ்கா இனத்தினர் முதலில் அவற்றின் சிறிய மாதிரிகளை செய்திருப்பர். பின்னர் கயிறுகளை பயன்படுத்தி அவற்றை அளந்து வரைந்திருப்பர் என கூறப்படுகிறது.

ஒரு விமானத்தின் ஜன்னல் வழியே பார்த்தால் நாஸ்கா கோடுகள் மிக சிறப்பாக தெரியும். ஆனால் உயரத்தில் இருந்து பார்க்கும்போது அவை சமவெளியின் அடிவாரங்கள் போலவே காட்சியளிக்கின்றன. அநேகமாக பெருவின் தொல்பொருள் ஆய்வாளர் செஸ்பே நின்ற மலைகளை கொண்டே அவர்கள் தங்கள் வேலைகளை சரிப்பார்த்திருக்க கூடும்.

நாஸ்கா மக்கள் வசிக்கும் நிலப்பரப்பு மிகவும் வறண்ட பகுதியாகும். அங்கு அதிக மழை பொழிவே கிடையாது. அதிகப்பட்சமாக அங்கு ஆண்டுக்கு 4 மில்லி மீட்டர்கள் தான் மழை பொழிகின்றன. மட்டுமின்றி அதிகமாக புழுதிகள் காணப்படும் பகுதியாக உள்ளன. இதனால் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த வறண்ட பூமியும் அதில் இருந்த நாஸ்கா கலாச்சாரமும் வெளி உலகிற்கு தெரியாமல் போனது.

விண்வெளி வீரர் படத்தை பொறுத்தவரை அது ராட்சத உருவம் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் தலை ராட்சத தலை போல பெரிதாக உள்ளது. அதே போல மூன்று விரல்களை கொண்ட மம்மி என கூறப்படும் விஷயமும் புரளி என்று கூறப்படுகிறது.

ஆனால் நாஸ்கா மம்மிகளின் நீண்ட மண்டையோடுகள் உண்மையானவை. ஆனால் அது நாஸ்கா கோடுகளை போலவே அந்த பழங்குடியினரின் கைவேலையால் செய்யப்பட்டது. இதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை மூளை சிதைவு என அழைக்கின்றனர்.

இது வயது வந்த குழந்தைகளின் மண்டை ஓட்டின் அமைப்பை மாற்றி அமைக்கும் முறையாகும். உலகெங்கிலும் உள்ள பல பண்டைய இனங்களில் இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு பழங்குடி இனத்தை மற்ற இனத்தில் இருந்து வேறுப்படுத்தி காட்டுவதற்காக இந்த முறை பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

பெருவில் நாஸ்கா கோடுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது தெளிவாக தெரிந்தாலும் அவை ஏன் உருவாக்கப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது.

இதனால் அவர்கள் வானியல் குறித்து ஆராய்ச்சி செய்தனர். பால் கொசோக் மற்றும் மரியா ரீச் என்பவர்கள் சூரியனும் சந்திரனும் உதிக்கும் இடத்தை குறிப்பதற்காக அந்த வரைப்படங்கள் வரையப்பட்டன என கூறுகின்றனர்.

இவை இரவில் வானில் விண்மீன்கள் அடையாளங்களாக உள்ளது போல பூமிக்கு அடையாளங்களாக இருக்கும் என கருதப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் ஆய்வாளர்கள் இந்த விளக்கத்தை சந்தேகிக்க துவங்கியுள்ளனர். அந்த படங்களுக்கும் வானத்திற்கும் எந்த வித பிணைப்பும் இருப்பதாக தெரியவில்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

நேஷனல் கியோகிராபிக் நிறுவனத்தை சேர்ந்த ரெயின்ஹார்ட் என்பவர் கூறும்போது அவை மத சடங்குகளை குறிப்பதாகவும் தண்ணீரை மையமாக கொண்டு வரையப்பட்டவை என்றும் கூறுகிறார்.

வறண்ட பகுதி என்பதால் நாஸ்கா மக்களுக்கு தண்ணீர் மிக அவசியமான ஒன்றாக இருந்தது. சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நாஸ்கா மக்கள் உயிரினங்களை வரைய நினைத்தனர் என கூறுகின்றனர். சிலந்திகள் பல பண்டைய கலாச்சாரங்களின் படி மழையுடன் தொடர்புடையவை.

அதே போலவே குரங்குகள் மற்றும் ஹம்மிங் பறவைகள் போன்றவை பெருவிற்கு அருகில் உள்ள காடுகளில் காணப்பட்டிருக்கலாம். ஏனெனில் அந்த காட்டில் ஏராளமாக தண்ணீர் இருந்திருக்கும். அதை குறிக்கவே அவர்கள் அந்த படங்களை வரைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

ஆனால் நாஸ்கா ஏன் அந்த கோடுகளை உருவாக்கினர் என்பதற்கான சரியான காரணம் கடைசி வரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. அது ஒரு மர்மமாகவே உள்ளது.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *