நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமான பிரச்சினை வராமல் தடுக்கிறது.

தென்னிந்தியாவில் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை நல்லெண்ணெய் தான். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நல்லெண்ணெயில் சீசேமோல் எனும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு  வருவதை தடுக்கும். நல்லெண்ணெயில் ஜிங்க் எனும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மற்ற எண்ணைகளை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமான பிரச்சினை வராமல் தடுக்கிறது.

நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும். நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்து, சருமத்தின் நெகிழ்வு தன்மையை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நல்லெண்ணெய் எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

மசாஜ் செய்ய ஏற்ற எண்ணெய் எது? - TopTamilNews

நல்லெண்ணெயில் லெசித்தின் எனும் பொருளும், லினோலிக் எனும் அமிலமும் இருப்பதால் அவை ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

உடல் சூட்டால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

நல்லெண்ணெய் மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறச் செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தினமும் நல்லெண்ணெயில் மசாஜ் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டை குத்தல் போன்றவை நீங்கும். கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் பாழாகும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், கண்களின் ஆரோக்கியம் மேம்படும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகு தொல்லை காணாமல் போய்விடும். ஆயுளும், இளமையும் எளிதில் நீடிக்க இந்த எண்ணெயே அருமருந்து.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *