சுவையான உருளைக்கிழங்கு சோறு சமைப்பது எப்படி?

Visits of Current Page:523
GlobalTotal: 234995

தேவையான பொருட்கள் :

மசாலா பொடி தயாரிக்க

 • தனியா – 2 டேபிள் ஸ்பூன்
 • மிளகாய் – 5
 • கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
 • கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • வெந்தையம் – 1 டேபிள் ஸ்பூன்
 • சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
 • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

 • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
 • கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
 • கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் – 2
 • கொத்தம்மலி கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

 1. அரிசியை உதிரியாக வேக வைத்து வெப்பம் தணிய ஆற வைக்கவும்.
 2. மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொடி தயாரிக்கத் தேவையான பொருட்களை எண்ணெய் இன்றி கடாயில் வறுக்கவும். 
 3. சூடு குறைந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும். 
 4. தற்போது கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புவை போட்டு வதக்கவும்.
 5. அடுத்ததாக காய்ந்த மிளகாய், கறிவேப்பிலைச் சேர்க்கவும்.
 6. தற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும்.
 7. சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். தற்போது அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து வதக்கவும். 
 8. உருளைக் கிழங்கு வெந்ததும் ஆற வைத்த சாதத்தை போட்டுக் கிளறவும்.
 9. இறுதியாகக் கொத்தமல்லி தழை தூவவும். சுவையான உருளைக் கிழங்குச் சாதம் தயார். இதற்கு மொறுமொறு அப்பளம், ஊறுகாய் பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply