கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.

தேர்த்திருவிழா வெள்ளி (17.05.2019) காலை 9.30 மணிக்கும் மறுநாள் சனிக்கிழமை (18.05.2019) காலை 6 மணிக்கு தீர்த்த திருவிழாவும் நடைபெறும். வேட்டை திருவிழா புதன் கிழமை (15.05.2019) மலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.

இது உள்ளூர் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. இதன் பொழுது அம்பாள் ஊர் வீதிகளில் வலம் வருவது வழக்கம். ஊரின் தெற்கு பகுதிக்கும் வடக்கு பகுதிக்கும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுவார்கள் . இதன் போது பத்தர்கள் பலர் வேடங்கள் போட்டு ஆடுவது மக்களை கவர்ந்த விடையமாகும்.

இத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் ஆர்வத்துடன் மின்விளக்கு , அமைத்தல், அலங்காரம் செய்தல், துப்பரவுப்பணி என பல வேலைகளை முன்எடுத்து வருகிறார்கள்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *