கொம்மந்தறை நூலகத்துக்கு கல்விச்சேவைக்காக கணனி ஒன்றை கையளித்த பிரித்தானிய பொறியியலாளர்

Visits of Current Page:967
GlobalTotal: 230611
கொம்மந்தறை நூலகத்துக்கு கல்விச்சேவைக்காக கணனி ஒன்றை கையளித்த பிரித்தானிய  பொறியியலாளர் – OORUM URAVUM

​கொம்மந்தறை நூலகத்திற்கு அதன் கல்விச்சேவை அபிவிருத்திக்காக பிரித்தானிய பொறியியலாளர் திரு. திருபவானந்தன் திருநாவுக்கரசு கணனி ஒன்றை கையளித்துள்ளார். மேலும் பல கணனிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நூலகத்துக்கு நேரடியாக வருகை தந்து கல்வி அபிவிருத்தி பற்றி கேட்டறிந்து கொண்ட பொறியியளாலர் மேலும் தான் உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பல சமூகசேவையில் ஈடுபடும் இவர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பல அமைப்புகள் ஊடக உதவிகளை வழங்கிவருகிறார்.

தற்போழுது ஆங்கிலக்கல்வியை கணனி உதவியுடன் பிரித்தானிய முறைப்படி நூலகத்தில் கற்பித்து வருகிறார்கள். மற்றைய பாடங்களையும் விரைவில் ஆரம்பிக்க உள்ளார்கள். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முன்பள்ளிக்கு மேலே இருக்கும் சிறிய மண்டபத்தில் இவ்வகுப்புகள் நடைபெற இருக்கின்றன.

Leave a Reply