ஒரு சிறப்பு பார்வை-சோப்பு

சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது. இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மை தான்.. ஆனால் விளம்பரத்தில் சொல்வது போல் எல்லா சோப்புகளும் 99.9% கிருமிகளை அழிப்பது இல்லை ! பொதுவாக சோப்புகள் இயற்கையாக விளையும் காய்கறி கொழுப்புகள் மற்றும் எண்ணெயிலிருந்து தயாரிக்க படுகின்றன… அவை ரொம்பவே சுத்தமானது.

soap

வெறுமனே தண்ணீர் வைத்து கைகளை கழுவும் போது கைகள் சுத்தமாவது இல்லை! பாக்டீரியா போன்ற கிருமிகள் நம் கைகளில் ஒட்டி கொண்டு தான் இருக்கும். அடுத்து நாம் சாப்பிடும் போது அக்கிருமிகள் நம் கைகளில் இருந்து வாய்க்கு சென்று விடும் வாய்ப்புகள் அதிகம். சாதாரண சோப்புகள் கூட கிருமிகளை விரட்டும் அதனை ஒழுங்காக உபயோகிக்கும் வழிதனை அறிந்து கொண்டால்..   சோப்பு போட்டு கைகளை நன்கு தேய்த்து   பின் ஓடும் தண்ணீரில் கைகளை கழுவுவது நலம் பயக்கும்.. அதன் பின்னே நல்ல காய்ந்த  சுத்தமான  துண்டில் கைகளை துடைத்து கொள்ளும் போது ஓரளவு சுத்தமாகும். உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதற்கு முன்னே நல்ல தரமான கிருமி நாசினிகள் உடைய சோப்பை  பயன்படுத்தும் போது கிருமிகள் முழுவதும் அழிந்து விடுகின்றன. சோப்பு வழங்கு பம்ப்(pump dispenser ) போன்றவை சோப்பு கட்டிகளுக்கு ஒரு படி மேல் தான் ..

soap-clipart-soap-bottle-md

கிருமி நாசினிகள் நிறைந்த சோப்புகள் நம் உடம்பின்  சுரப்பிகளில் இருந்து சுரக்கும் திரவங்களில் வளரும் நுண்ணுயிர்களை அழிக்க வல்லது. ஆனால் நித்தம் இத்தகைய சோப்புகளை உபயோகிக்கும் போது நம் தோலில்  தடுப்பு சுவர் போல் இருந்து நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களும் சேர்ந்ததே அழிந்து போகும். இந்த வகை நல்ல பாக்டீரியாக்கள் நம் உடம்பில் சுரக்கும் வியர்வையை தின்று உயிர் வாழும். மற்ற நோய் கிருமிகள் நம் வியர்வையை  உண்ணுவது மட்டுமல்லாது  நம்மையும் சேர்ந்தே உண்டு விடும். Staphylacoccus aureys என்பது ஒரு கிருமி.. பருக்கள் , தோல் கொப்புளங்கள் ஆகியவற்றுக்கு காரணகர்த்தா… கிருமி நாசினிகள்  இருக்கும் சோப்பை பயன்படுத்தும் போது  இந்த வகை ஆக்கிரமிப்பாளர்கள்  செத்து மடிகின்றனர்..

364181_f260

இதே சோப்பை நாம் ஏன் துணி துவைக்க பயன் படுத்த கூடாது என்ற  கேள்வி எப்பொழுதாவது எழுந்திருக்கிறதா?  அப்படி செய்தால் நம் முகம் , கை கால், உடம்பு சுத்தமானது போல் நம் துணிகளும் சுத்தம் ஆகுமா?? கண்டிப்பா ஆகாது.. இந்த வகை சோப்புகளை துணி துவைக்க பயன்படுத்தும் போது அவை துணிகளில் படிந்திருக்கும் அழுக்கை போக்குவது போல் போக்கி திரும்பவும் துணியிலேயே அழுக்கை படிய வைத்து விடும்.. மேலும் உப்பு தண்ணீரில் துணியை துவைக்கும் பொழுது  சோப்பானது  அழுக்கோடு சேர்ந்து ஒரு தயிர் போன்ற பொருளாய் மாறி துணியில் ஒட்டி கொள்ளும்! அது தண்ணீரிலும் கரையாமல் நிரந்தரமாய் துணியிலேயே தங்கி துணியை நாசமாக்கி  விடும். அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா கதை தான்!!

detergent-cake-500x500

இது போன்ற பின்னடைவுகளை தவிர்க்க செயற்கையாக கண்டுபிடிக்க பட்டது தான் டிடர்ஜெண்ட் (Detergent ). இவை துணிகளை சுத்தமாக துவைப்பது மட்டுமின்றி, அழுக்கு திரும்பவும் துணியினுள் வந்து ஒட்டி கொள்ளாது காத்து அருள்கிறது . மேலும் இது உப்பு தண்ணீரிலும் நன்கு செயல் படுகிறது!

இந்த டிடெர்ஜெண்டில்  இருக்கும் முக்கிய உட்பொருள் மேற்பரப்பில் இருந்து செயல்படும் காரணிகள் (Surfactants ).  இந்த காரணிகள் எவ்வாறு செயல் படுகிறது என்று இப்பொழுது பார்க்கலாம். தண்ணீரானது நம்மை முழுமையாக நனைத்து நம்மை சொட்ட சொட்ட ஈரம் ஆக்குகிறது என்று நினைக்கிறோம்.. ஆனால் உண்மை அது இல்லை.. தண்ணீருக்கென்று  ஒரு மேற்பரப்பு பதற்றம்(surface  tension ) உண்டு.

images (6)
66

தண்ணீரின் மூலக்கூறுகள்(molecules ) ஒன்றை ஒன்று ஈர்த்து  கொண்டு தனி தனி சொட்டுகளாய் இருக்கும் தன்மையுடையது.. இந்த மேற்பரப்பு பதற்றத்தை கொஞ்சம் குறைக்க முடிந்தால் தண்ணீர்  சீராக எல்லா இடமும் பரவி சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும்.. இதை  சிறப்பாக செய்து முடிப்பதே இந்த மேற்பரப்பில் இருந்து செயல்படும் காரணிகளின்(surfactants ) வேலை !

இப்போ டிடர்ஜெண்ட் எப்படி செயல் புரிகிறது என்று பார்க்கலாம்.. கிரீஸ் , எண்ணெய் போன்ற கறைகள்  ஆடைகளின் மேல் படிந்திருக்கும் போது அதை தண்ணீரினால் தனியே சுத்தம் செய்ய முடியாது. நாம் அந்த தண்ணீரில் சேர்க்கும் டிடேர்ஜென்ட்டின் கைகளில் தான் இருக்கிறது..  டிடர்ஜெண்ட்டில்  இருக்கும் மேற்பரப்பில் இருந்து செயல்படும் காரணிகளின்(surfactants ) மூலக்கூற்றுக்கு(molecule )  தலை பிரட்டையை  போல தலை  ஒன்று வால்  ஒன்று இருக்கும் .

Surfactant_2
soap_293x267

அதிலே தலைக்கு தண்ணீர் என்றால் கொள்ளை பிரியம். வாலுக்கொ  தண்ணீர் என்றால் தீராத வெறுப்பு. அதனால் வால்  ஆனது துணிகளில் கறையாய்  படிந்திருக்கும் கிரீசையும் எண்ணெயையும் தன்  பக்கம் ஈர்த்து கொள்கிறது…  இந்த தருணத்தில் துணியானது தண்ணீரில் அலசப்படும் போது , தலை பகுதி தண்ணீரின் மேல் கொண்ட பிரியத்தில் அதன் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து ஓடும் போது , வாலும்  பின் தொடர்ந்து தானே ஆக வேண்டும் . வேறு வழியின்றி எண்ணெயும் கிரீசும் ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பது போல் வாலை ஒட்டி கொண்டு கிளம்ப நம் கறை படிந்த துணி ஒரு வழியாய் சுத்தம் ஆகி விடுகிறது !!

சோப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியது

சோப் வாங்கும்போது முக்கியமாக டி.எப்.எம், பி.ஹெச் அளவு, அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மற்றும் மூலப் பொருட்களைப் பார்த்து வாங்க வேண்டும்.

சோப்பின் வேலை உடலின் மீதுள்ள அழுக்குகளை அகற்றுவதும், வியர்வை துவாரங்களை அடைப்பின்றி வைத்திருப்பதும் ஆகும். வியர்வை துவாரங்கள் அடைப்பின்றி இருந்தால் தான் வியர்வை வழியாக கழிவுகள் வெளியேறும். இதன் மூலம் ரத்த ஓட்டமும் சுத்தமாகும்.

சருமத்தில் உள்ள அழுக்கை அகற்ற ஆல்கலி, கொழுப்பு அமிலம், மினரல் அமிலம், கிளென்சிங் கெமிக்கல்ஸ் போன்றவை கலந்து சோப் தயாரிக்கப்படுகிறது

பொதுவாக, டி.எப்.எம். (டோட்டல் பேட்டி மேட்டர்) அளவைப் பொறுத்து, அதாவது அதில் சேர்க்கப்படும் தரமான கொழுப்பு எண்ணெய்யைப் பொறுத்து, சோப்பு தரம் பிரிக்கப்படுகிறது. பி.ஐ.எஸ். என்ற தர நிர்ணயத்தின்படி, மூன்று நிலை சோப்புகள் இருக்கின்றன.

கிரேடு 1 என்பது 76 சதவிகிதத்துக்கும் அதிகமாக டி.எப்.எம் இருக்கும் சோப்பைக் குறிக்கும். இதன் விலை சற்று அதிகம்.

கிரேடு 2 என்பது 70-க்கு கீழ் டி.எப்.எம் கொண்டது.

கிரேடு 3 என்பது 69 சதவிகிதத்துக்குக் குறைவான டி.எப்.எம் இருக்கும். குறைந்த விலைகளில் கிடைக்கும்.

65 சதவீதத்திற்கும் குறைவான டி.எப்.எம். இருந்தால் அது தரம் குறைந்த சோப் எனப்படுகிறது. எனவே சோப் வாங்கும்போது டி.எப்.எம். அளவினை பார்த்து வாங்குங்கள்.

வீரியம் நிறைந்த ரசாயனங்களான சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது. பெரியவர்கள் சிலர் பேபி சோப் எனப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பினை பயன்படுத்துகிறார்கள். அது சரியில்லை. அதை பயன்படுத்தினால் உடலில் அழுக்கு தங்கிவிடும். சருமத் துளைகள் பிறந்த குழந்தைகளுக்கு இருக்காது

பிற நேரங்களில் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவினால் போதுமானது. அடிக்கடி முகத்தில் சோப் போட்டால், சருமம் வறண்டு போகும். சாதாரண சோப் ஒத்துக்கொள்ளாதவர்களும், சரும பிரச்சினை உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தை குறைக்கவே நறுமண ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே நறுமணத்தினை மட்டுமே விரும்பி சோப் வாங்குவதை தவிர்த்திட வேண்டும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *